அதிபர் டிரம்பின் கொரோனா குறித்த சிறப்பு ஆலோசகர் ராஜினாமா


உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 

அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று தொடர்பான தனது சிறப்பு ஆலோசகராக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக நரம்பியல் நிபுணரான ஸ்காட் அட்லாஸ் என்பவரை நியமித்தார்.

Also Read  "தமிழ்கூறும் நல்லுலகம்": சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ் மொழி விழா…!

பொது சுகாதாரம் மற்றும் தொற்று நோயியலில் முறையான அனுபவம் இல்லாத ஸ்காட் அட்லாசை கொரோனா தொடர்பான ஆலோசகராக நியமித்ததாக டிரம்ப் மீது விமர்சனங்கள் எழுந்தன. 

மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய நடவடிக்கைகளாக கருதப்படும் முக கவசம் அணிதல் மற்றும் ஊரடங்கை அமல்படுத்துதல் ஆகியவற்றை ஸ்காட் அட்லாஸ் கடுமையாக எதிர்த்தார்.

Also Read  இந்தியாவுக்கு சென்றால் அபராதம்..! சவுதி அரேபியா அதிரடி உத்தரவு…!

இதனால் கொரோனா வைரஸ் விவகாரத்தில் அவர் அதிபர் டிரம்பை தவறான பாதையில் வழி நடத்துவதாக கண்டனங்கள் வலுத்தன. 

இதனிடையே அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரியில் 20-ந்தேதி பதவியேற்கிறார்.

Also Read  குரங்குகளை தாக்கும் வினோத வைரஸ்! - 'மங்கி பி' தொற்றால் ஒருவர் உயிரிழப்பு…!

இந்த நிலையில் அதிபர் டிரம்பின் கொரோனா குறித்த சிறப்பு ஆலோசகரான ஸ்காட் அட்லாஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இந்த தகவலை டுவிட்டரில் தெரிவித்துள்ள ஸ்காட் அட்லாஸ், ஜோ பைடன் உருவாக்கியுள்ள புதிய கொரோனா தடுப்பு குழுவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு 2 முறை கொரோனா உறுதி – வைரஸின் மரபணுவில் மாற்றம்

Tamil Mint

தூக்கத்தில் Earbud-ஐ விழுங்கிய நபர்! – அமெரிக்காவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

157 முறை தோல்வி; 158வது முறையாக லைசன்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்!

Tamil Mint

தலைக்கு வந்தது தலைபாகையுடன் போனது – இந்தியப் பெருங்கடலில் விழுந்த ராக்கெட்டின் ராட்சத பாகங்கள்…!

sathya suganthi

மணப்பெண் தோழிக்கு இத்தனை லட்சம் சம்பளமா.!?

suma lekha

இவர்கள் எல்லாம் மாஸ்க் அணிய தேவையில்லை.. அரசு அதிரடி அறிவிப்பு

Ramya Tamil

“சூயஸ் கால்வாய்க்கு நீ தேவை” – நாய்க்கு குவியும் பாராட்டு!

Shanmugapriya

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேட்டி

Tamil Mint

விமான பயணத்தின்போது உள்ளாடையை கழற்றி வைத்த பெண்! – கடும் விமர்சனத்திற்குள்ளாகும் வீடியோ

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி போடாவிடில் சிறை – எங்கு இந்த உத்தரவு தெரியுமா?

sathya suganthi

மியான்மரில் தீவிரமடையும் கலவரம் – பச்சிளம் குழந்தை உள்பட ஒரே நாளில் 114 பேர் சுட்டுக்கொலை

Devaraj

ஹோலி வாழ்த்து சொன்ன அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்…!

Devaraj