அமெரிக்க அதிபரின் சம்பளம், வசதிகள் என்னென்ன?


 உலக வல்லரசான அமெரிக்காவின் அதிபருக்கு எவ்வளவு வசதிகள் இருக்கும்?

 

உலக அதிபர்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்தவர்.

 

இவரது சம்பளம் ஓராண்டிற்கு 4 லட்சம் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 2.6 கோடி ரூபாய். இது தவிர அவரது ஆண்டு செலவுக்காக 50 ஆயிரம் டாலர்கள், பயணச் செலவிற்காக வருமான வரி பிடித்தம் இல்லாத ஒரு லட்சம் டாலர்கள். பொழுதுபோக்கிக்காக 19 ஆயிரம் டாலர்கள். சாதாரண அரசு ஊழியரைப் போல இதரப் படிகளும் அவ்வப்போது சம்பளவு உயர்வும் உண்டு.

 

வெள்ளை மாளிகைதான் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம். மருத்துவ வசதி, பொழுதுபோக்கு அம்சங்கள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சேவைகள் என சகலமும் அந்த மாளிகையின் உள்ளே உண்டு.

Also Read  அப்போது கொரோனா ஹாட்ஸ்பாட்! - தற்போது 24 மணி நேரத்தில் 21 பேருக்கு மட்டுமே பாதிப்பு!

 

அதிபரின் அலுவலக நிமித்தமான உணவு உபசரிப்பு மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கான செலவுகளை அமெரிக்க அரசு ஏற்றுக்கொள்கிறது. தமது உடைகளை துவைப்பதற்கும், தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய விருந்தினர்களுடனான விருந்துகளுக்கு அதிபர்தான் செலவு செய்துக்கொள்ளவேண்டும்.

 

அமெரிக்க அதிபருக்கு உரிமையான மற்றொரு இடம் கேம்ப் டேவிட் எனப்படும் மலைப் பகுதி ராணுவ முகாம். பாதுகாப்பு மிகுந்த இந்தப் பகுதியை, பொழுதுபோக்குக்காகவும், முக்கியக்கூட்டங்களை நடத்தவும் அதிபர்கள் பயன்படுத்துகிறார்கள். இது தவிர 70 ஆயிரம் சதுரடிக்கும் அதிக பரப்பளவை கொண்ட பிலையர் ஹவுஸ் அதிபரின் ஓய்வில்லமாக திகழ்கிறது.

Also Read  இலங்கை டான் கோவையில் மரணம்: விஷம் கொடுத்து கொன்றாரா காதலி?

 

ஊருக்குள் அவர் மேற்கொள்ளும் பயணத்திற்காக ஆயுதங்கள் தாங்கிய, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சொகுசு லிமோசைன் கார் உள்ளது. இதில் பாதுகாப்பு அம்சங்களுக்கென ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

வெளிநாட்டு பயணித்திற்காக சிறப்பு போயிங் 747 – 200B ஜெட்விமானத்தில் அதிபர் பயணிக்கும்போது அது ஏர்போர்ஸ் ஒன் என்று அறியப்படுகிறது.

 

 நடுவானில் எரிபொருள் நிரப்பிக்கொள்ளும் வசதியுடைய இந்த விமானத்தில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்க முடியும். எந்த ஒரு நெருக்கடி நேரத்திலும் தகவல் ஏற்படுத்திக்கொள்ளும் அதி நவீன தகவல் தொடர்பு வசதிகள் அதிபர் பயணிக்கும் விமானத்தில் உள்ளன.

 

அதே போல் பிரத்யேக ஹெலிக்காப்டரில் அவர் பயணிக்கும்போது அது மரைன் ஒன் என அறியப்படுகிறது.

Also Read  இனிமே டெல்டா வகை கொரோனாதான்…! 96 நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும்: உலக சுகாதார அமைப்பு

 

 அதிபர் பயணிக்கும்போது ஐந்து ஹெலிகாப்டர்கள் ஒரு சேர பறந்து அவ்வப்போது இடம் மாறி மாறி பறக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக அவ்வாறு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

 

அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரை காக்க அமெரிக்காவில் இரகசிய சேவை இயங்குகிறது. தாங்கள் காக்கும் நபர் மற்றும் இடங்களுக்கு தனியாக ரகசிய குறியீடு பெயர் அளிக்கப்படுகிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இந்த காலக்கட்டத்தில் அது தெளிவான தகவல் தொடர்புக்காக பயன்படுத்தப்படுகிறது.

 

அதிபர் ஓய்வுபெற்ற பிறகு, ஓய்வூதியம், அலுவலகம் மற்றும் பணியாளர்கள் என பல சலுகைகள் உண்டு. அதிபராக இருந்தபோது கிடைத்த வசதிகள் சில ஓய்வு காலத்திலும் கிடைக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவால் குவியும் சடலங்கள்! – புதைக்க இடமின்றி தவிக்கும் அவலம்!

Lekha Shree

“பள்ளி சீருடை அணிவது எனக்கு அவமானமாக இல்லை” – 50 வயதில் பள்ளிக்கு செல்லும் பெண்!

Shanmugapriya

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் திடீர் புகை!

suma lekha

ஓட்டுனர் இல்லாமல் தானாக நகரத் தொடங்கிய ட்ரக்! – வைரல் வீடியோ

Shanmugapriya

இரண்டாக உடைந்தது உலகின் மிகப்பெரிய பனிப்பாறை!

Shanmugapriya

அடேங்கப்பா…. ரூ.25 கோடிக்கு ஏலம் போன போலி மோனலிசா ஓவியம்!

Shanmugapriya

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை… வலுக்கும் எதிர்ப்புகள்!

Lekha Shree

டெலிவரி பேக்கில் குழந்தை! – தந்தையின் உருக்கமான கதை!

Lekha Shree

‘வரலாறு ஒரு பார்வை’: சிங்கப்பூர் தனி நாடான தினம் இன்று..!

Lekha Shree

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு இருதய நோய்? – வைரலாகும் உடல் மெலிந்த புகைப்படம்

sathya suganthi

காலநிலை மாற்றம்: கிரெட்டா தலைமையில் பிரம்மாண்ட பேரணி…!

Lekha Shree

இளவரசர் பிலிப்-ன் மறுமுகம்! – சமூக வலைத்தளங்களில் வலுக்கும் கண்டனங்கள்!

Lekha Shree