அமைச்சர் மரணத்தில் மர்மம், ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை


சமீபத்தில் காலமான அமைச்சர் துரைக்கண்ணு மரணம் குறித்து திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின்  வெளியிட்ட அறிக்கை

 

தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போதும், அவர் சுயநினைவின்றி மரணப் படுக்கையில் உயிருக்குப் போராடியபோதும், மாற்றுக் கட்சியினரும்கூட அவர் நலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்பதையே விரும்பினர். ஆனால், சொந்தக் கட்சிக்காரர்களான அ.தி.மு.க.வின் தலைமையோ, அமைச்சர் தரப்பிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த பல நூறு கோடி ரூபாயைத் திரும்பப் பெறுவதற்காக, அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்தது என்றும், பணத்திற்குத் தேவையான  உத்தரவாதம் கிடைத்தபிறகே, அமைச்சரின் மரண அறிவிப்பு வெளியானது என்றும், அதிர்ச்சி தரும் செய்திகள் நாளேடுகளிலும், புலனாய்வுப் பத்திரிகைகளிலும் விரிவாக வெளியாகியுள்ளன.

Also Read  மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா மீரா மிதுன்.? : மருத்துவர் முன்னிலையில் வாக்குமூலம் பெற திட்டம்.!

 

அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், தங்களுக்குப் பதவி தந்து வாழ்வளித்ததாக உதட்டளவில் மட்டும் உச்சரிக்கும்  ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மத்தையே புதைத்தவர்கள். எளிமையாகத் தோற்றமளித்த – அதிகம் அறியப்படாத ஓர் அமைச்சரின் மரண அறிவிப்பில் மர்மம் இருக்கலாம் என்பதைப் புறக்கணிக்க முடியவில்லை.

 

ஊழல் வாயிலாக எடப்பாடி பழனிசாமியும் அவரது அமைச்சர்களும் கொள்ளையடித்துச் சேர்த்த பணத்தின் ஒரு பகுதி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் செலவுகளுக்காக மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அதைக் கேட்டுத்தான் அமைச்சரின் குடும்பத்தாரிடம் ‘விசாரணை’ நடைபெற்று, பணத்தை மீட்டதற்குப் பிறகே, அமைச்சரின் மரண அறிவிப்பு வெளியானதாகவும், பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்ட தொகையின் மதிப்பு 300 கோடி ரூபாய் முதல் 800 கோடி வரை இருக்கும் என்றும், அதிர வைக்கும் செய்திகள் வெளியாகின்றன

Also Read  "சகிப்புத்தன்மை வேண்டும்!" - Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை..!

 

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவரான கும்பகோணம் மணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்டவருமான முருகன் என்பவரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். அவர் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்துச் சாலை மறியல் செய்த மறைந்த அமைச்சரின் ஆதரவாளர்களான மேலும் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Also Read  முக்கிய ஆய்வை மேற்கொள்ளும் முதல்வர்

ஊழலில் மூழ்கி, ஊழலில் திளைத்து, ஊழலையே முழுநேர வேலைத் திட்டமாகக்  கொண்டுள்ள முதல்வர். பழனிசாமி அரசு, கொள்ளையடித்த பணத்தை மட்டுமே நம்பி தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது என்ற அருவருப்பையே  இந்த நடவடிக்கைகள் நாட்டு மக்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றன. சூறையாடி, வாரிச் சுருட்டிய பல கோடிக்கணக்கான பணம், கொடநாடு  மர்ம மாளிகையில் பதுக்கப்பட்டிருந்ததைப் போல, அதன் தொடர்பாக மர்மக் கொலைகள் நடந்து பச்சை ரத்தம் வழியெங்கும் சிந்தியதைப் போல, இப்போதே வெவ்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க. தலைமையால் பல நூறு கோடி ரூபாய் பதுக்கப்பட்டு இருக்கிறது என்கிற திடமான சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காரை பின் தொடர்ந்த இளைஞரோடு செல்பி எடுத்த சசிகலா!- வைரலாகும் போட்டோ

Tamil Mint

“ராயபுரம் மக்கள் அனைவருக்கும் நன்றி” – ஜெயக்குமார்

Lekha Shree

மு.க.ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்து பெண் நேர்த்திக்கடன்…!

sathya suganthi

ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது பாய்ந்தது மேலும் ஒரு வழக்கு…!

sathya suganthi

தமிழ்நாடு – கேரளா எல்லையில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கேட்கும் போலீசார்.. தவிக்கும் மக்கள்…!

suma lekha

ஜனவரியிலேயே சுடும் சூரியன்… மே மாதம் எப்படி?

Tamil Mint

தமிழக அரசு விதித்துள்ள ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள்…முழு விவரம் இதோ…!

Devaraj

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Lekha Shree

“அதிமுக ஆட்சியாளர்களை களையெடுக்க வேண்டும்”: மு.க. ஸ்டாலின்

Tamil Mint

ஈபிஎஸ் ராஜினாமா – மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து!

Lekha Shree

11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் விவகாரத்தில் புதிய திருப்பம்

Tamil Mint

சிங்கங்களுக்கு கொரோனா – எப்படி பரவியது?

Lekha Shree