அரசு ஊழியர்கள் முறைகேடாக சேர்த்த சொத்துகள் மட்டுமின்றி அவர்களின் ஒட்டுமொத்த சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை


சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், அரசின் சார்பில் தனக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதை ரத்து செய்ய உத்தரவிடுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இதையடுத்து “மனுதாரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசு ஊழியர்கள்” என்பதை மறைத்து அரசின் இலவச பட்டாக்களை பெற்றுள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

Also Read  போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை - தமிழக அரசு அறிவிப்பு

மேலும், “ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் அரசின் சலுகையை இந்த குடும்பத்தினர் ஏமாற்றி பெற்றுள்ளனர். அந்த மனைகளில் அவர்கள் வீடுகளை கட்டி உள்ளனர். இதுபோன்ற அரசு ஊழியர்களின் நடவடிக்கையால் ஊழல் வழக்குகள் அதிகரிக்கின்றன. அரசு ஊழியர் என்பவர் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் மனுதாரர் தவறான முன்னுதாரணமாக உள்ளார். எனவே இந்த வழக்கில் வருவாய் துறை செயலர் சமூக நலத்துறை செயலர் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்த்து அரசு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த வழக்கு திங்கட்கிழமை நீதிபதிகள் கிருபாகரன்,புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

Also Read  சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

அரசு ஊதியம் வாங்கும் ஒரு ஊழியர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை சமூக விரோத செயலாக நீதிமன்றம் பார்க்கிறது என்று நீதிபதிகள் கூறினர். 

முறைகேடுகளில் சம்பாதித்த சொத்துக்கள் மட்டுமல்லாமல் முழு சொத்தையும் பறிமுதல் செய்து உத்தரவிட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற செயல்கள் தடுக்கப்படும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Also Read  குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்: கொரோனா விதிகளை மீறியதாக கைதாகி 8 மணி நேரத்துக்குப்பின் விடுதலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“இந்த மாதம் எங்களுக்கு 2 கோடி தடுப்பூசி கொடுங்க” : மத்திய அரசிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்.

mani maran

மெரினாவில் கருணாநிதி உடலடக்கத்துக்கு இடம் தராதது ஏன்? – எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்…!

Devaraj

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தை மீண்டும் திறப்பு

Tamil Mint

‘சியான் 60’ படத்தின் டைட்டில் அறிவிப்பு..! செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

mani maran

முதலமைச்சராக மு.க.ஸ்டாலினின் முதல் சைக்கிள் பயணம் – செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்…!

sathya suganthi

“தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

“தமிழகத்தில் இன்று மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது” – தமிழக அரசு

Lekha Shree

கொடநாடு கொலை வழக்கு – ஓபிஎஸ்-இபிஎஸ் பேரவைக்கு வெளியே தர்ணா..!

Lekha Shree

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ‘விடியல் எப்போது ஸ்டாலின்’ ஹேஷ்டேக்…! காரணம் இதுதான்!

Lekha Shree

பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கோரிக்கை

Tamil Mint

முடிந்தது புரட்டாசி, குவிந்தது கூட்டம்

Tamil Mint

யூடியூபர் மதனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்…!

Lekha Shree