ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனை பதவி நீக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்


ஆந்திர முதல்வர், ஜெகன்மோகன் ரெட்டி, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி மீது குற்றச்சாட்டு கூறி கடிதம் எழுதியது தொடர்பான விவகாரத்தில், அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி, என்.வி.ரமணா குறித்து, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். 

Also Read  மாஸ்டர் கார்டு நிறுவனம் புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்க தடை…!

அதில் “தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திரபாபு நாயுடுவுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா, மிகவும் நெருக்கமானவர். சந்திரபாபு நாயுடு ஆட்சியில், அமராவதியில் நில அபகரிப்பு முறைகேடு நடந்தது. அதில், நீதிபதி ரமணாவின் இரண்டு மகள்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. எனினும், அந்த வழக்கு விசாரணையை முடக்க, உயர் நீதிமன்றம் வாயிலாக, ரமணா முயற்சித்து வருகிறார். அவருக்கு ஆதரவாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மஹேஸ்வரி செயல்பட்டு வருகிறார். சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது கட்சியினருக்கு எதிராக, பல ஊழல் வழக்குகள் உள்ளன” என ஜெகன்மோகன் தெரிவித்து இருந்தார். 

இதை எதிர்த்து அவரை பதவி நீக்கம் செய்ய கோரி பொதுநலன் மனு ஒன்றை வழக்கறிஞர்கள் ஜிஎஸ் மணி, பிரதீப் குமார் யாதவ், எஸ்.கே.சிங் ஆகியோர் தாக்கல் செய்தனர். 

Also Read  கொரோனா இல்லாத கிராமத்திற்கு ரூ.50 லட்சம் பரிசு…! எங்கு தெரியுமா?

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், செய்திகளின் அடிப்படையில் மனுதாரர் வழக்குத் தொடர்ந்திருப்பதாகக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை நெருங்குகிறது

Tamil Mint

கம்பளா போட்டியில் இந்தியாவின் உசேன்போல்ட் சாதனை…!

Devaraj

கிறிஸ்துமஸ் தினத்தன்று 6 மாநில விவசாயிகளுடன் கலந்துரையாட உள்ளார் பிரதமர் மோடி

Tamil Mint

பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கான குட்நியூஸ்..! மத்திய அரசு நிதியுதவி…!

sathya suganthi

டெல்லி முதல்வர் மகளிடம் பண மோசடி! பிரபல ஆன்லைன் விற்பனை தளம் மூலம் பணம் பறிப்பு!

Tamil Mint

உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு 62வது இடம்

Tamil Mint

கொரோனா 2ம் அலையின் எதிரொலி – கோவாவில் பொதுமுடக்கம் அறிவிப்பு!

Lekha Shree

உயர்த்தப்படும் ஏடிஎம் கட்டணங்கள்: வாடிக்கையாளர்களே உஷார்.!

mani maran

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி…! கேரளா அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சி

Devaraj

இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி.

Tamil Mint

பச்சை, மஞ்சை, வொயிட், ரோஸ் – இணையத்தில் வைரலாகும் பச்சை பூஞ்சை ட்ரோல்ஸ்!

Lekha Shree

மகா சிவராத்திரி – ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் குவிந்த மக்கள்

Devaraj