இந்தியாவின் தேவை “ஒரு நாடு, ஒரு தேர்தல்”: பிரதமர் மோடி


80வது அகில இந்திய தலைமை அலுவலர்கள் மாநாட்டில் காணொளி வாயிலாக பங்கேற்றார் பிரதமர் மோடி. 

அம்மாநாட்டில் பேசிய அவர் ஒரு நாடு, ஒரு தேர்தல் என்பது இந்தியாவின் தேவை எனவும் வெவ்வேறு மாதங்களில் வெவ்வேறு இடங்களில் தேர்தல்கள் நடத்தப்படுவதால் வளர்ச்சிப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.  

Also Read  கொரோனா வைரசுக்கு எமனாக வரும் "நானோ முகக்கவசம்" - வியக்கவைக்கும் தகவல்கள்…!

மேலும் பேசிய அவர் “2008ம் ஆண்டு இதே நாளில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையைத் தாக்கினர். வெளிநாட்டினர், போலீசார் உட்பட பலர் இறந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அந்த காயங்களை இந்தியா மறக்காது. இன்று இந்தியா புதிய கொள்கைகளுடன் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் எங்கள் பாதுகாப்பு வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்” என நெகிழ்ச்சியாக கூறினார்.

“நாம் நமது கடமைகளை செய்தால், உரிமைகள் தானாகவே பாதுகாக்கப்படும். ஒரு நாடு, ஒரு தேர்தல் என்பது விவாதத்திற்குரியது மட்டுமல்ல இந்தியாவின் தேவையும் கூட. இதற்காக நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். இதற்கான வழியை நாம் ஏற்படுத்த வேண்டும். நாடு முழுவதும் பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும்” என தன் கருத்தைத் தெரிவித்தார்.

Also Read  சோர்ந்து அமர்ந்திருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மத்திய அமைச்சராக முருகன் நியமிக்கப்பட காரணம் இதுதான்…!

sathya suganthi

ஆக்கர் கடையில் சாக்கு பைகளில் கண்டெடுக்கப்பட்ட 306 ஆதார் கார்டுகள்! கேரளாவில் பரபரப்பு!

Tamil Mint

வீடுகளுக்கே தேடி வரும் ரேஷன் பொருட்கள் – மார்ச் முதல் அமல்!

Lekha Shree

புதிதாக வாட்ச் வாங்கிய இந்திய கிரிக்கெட் வீரர்…! விலையை கேட்டு வாயடைத்து போன ரசிகர்கள்..!

Lekha Shree

கோவேக்சின் தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் ரத்தமா? மத்திய அரசு விளக்கம்…!

sathya suganthi

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவாரா? உங்களுக்கு காத்திருக்கும் புது சிக்கல்…!

sathya suganthi

இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்புக்குள்ளான இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree

எப்போதில் இருந்து வழக்கமாக ரயில் சேவை – ரயில்வே அதிகாரி தந்த அப்டேட்…!

Devaraj

மது அருந்தி திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை! – ஆத்திரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்!

Shanmugapriya

“ மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன்..” நாராயணசாமி

Ramya Tamil

கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட பெண்!

Shanmugapriya

உ.பி யில் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீர் திட்டம்

Tamil Mint