இந்தியாவில் வாரிசு அரசியலை பாஜக ஒழித்துள்ளது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா


இன்று சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு தமிழக நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

பின்பு அவர் அந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார். அதில் அவர் “இந்தியாவில் வாரிசு அரசியலை பா.ஜ., படிப்படியாக ஒழித்துள்ளது. தமிழகத்திலும் ஒழிப்போம்” என தெரிவித்துள்ளார்.

“உலகின் தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது. அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் மிகவும் தொன்மையானது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். 

மேலும் அவர் “கொரோனாவுக்கு எதிராக 130 கோடி மக்களும் அரசுடன் இணைந்து போராடுகின்றனர். கொரோனாவுக்கு எதிராக முதல்வரும், துணை முதல்வரும்  வெற்றிகரமாக போராடி வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் அறிவியல் பூர்வமாகவும் துல்லியமான தரவுகளுடனும்  பேசுகின்றனர்.கொரோனாவில் இருந்து குணமடைவோர் சதவீதம், நாட்டிலேயே தமிழகத்தில் அதிகம். தமிழகம் போன்று வேறு எங்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த வைரசை கையாள்வதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது” என்று தமிழகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை  வெகுவாக பாராட்டினார். 

Also Read  கொரோனாவால் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு - அதிர்ச்சி ரிப்போர்ட்…!

“மாநிலங்களுக்கு இடையிலான நல்லாட்சியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது” எனவும் அவர் புகழாரம் சூட்டினார்.

இதையடுத்து அவர் பேசுகையில் “அனைவருக்கும் வீடு என்ற திட்டம் 2022ம் ஆண்டிற்குள் நிறைவேறும்” என உறுதியளித்தார். 

Also Read  "2ம் அலை கைமீறிவிட்டது" - கொரோனாவின் கோரப் பிடியில் தமிழகம்!

மேலும் மத்திய மற்றும் மாநில அரசின் சிறப்பான திட்டங்களை விரிவாக கூறி தங்கள் கட்சியின் சாதனைகளை பற்றி பேசினார். 

இதனைதொடர்ந்து அவர் “மத்திய அரசை குறைகூறும் தி.மு.க., 10 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார்கள்.   தமிழகத்திற்கு நாங்கள் செய்தவற்றை பட்டியலிட தயார். திமுக விவாதிக்க தயாரா?” எனக் கேள்வி எழுப்பினார். 

Also Read  கொரோனா 3வது அலை : மோடி அரசுக்கு ராகுல்காந்தி தந்த 2 அட்வைஸ்…!

தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்காகவும் மற்றும் ஏழை மக்களின் நலனுக்காகவும்  மோடி அரசும், பழனிசாமி அரசும் என்றும் தமிழ் நாட்டு மக்களுடன் துணை நிற்கும் என உறுதியாகக் கூறினார்.

2ஜி உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை செய்த திமுகவுக்கு ஊழல் பற்றி பேச என்ன அருகதை உள்ளது. தமிழகத்தில், குடும்ப அரசியலுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் என அவர் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஏன் விவாகரத்து செய்தோம்? அமீர்கான் மற்றும் மனைவி கிரண் ராவ் இணைந்து வெளியிட்ட வீடியோ!

sathya suganthi

மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியை தொடர்பு மொழியாக பயன்படுத்துங்கள்: அமித் ஷா

Tamil Mint

சாதி மறுப்புத் திருமணம் செய்தால் இரண்டரை லட்சம் ’ – ஒடிசா முதல்வர் அறிவிப்பு

Tamil Mint

எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கிய நடத்துநருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை…!

Lekha Shree

“தடையை மீறி விநாயகர் சிலை வைப்போம்” – அர்ஜுன் சம்பத் உறுதி..!

Lekha Shree

இன்று முதல் அக்னி நட்சத்திரம்…! மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை…!

sathya suganthi

முதல்வர் பழனிசாமி 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை எடப்பாடியில் தொடங்கினார்

Tamil Mint

சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் – லஞ்சம் தந்த வழக்கில் கர்நாடக நீதிமன்றம் அதிரடி உத்தரவு

sathya suganthi

சென்னையில் அத்தியாவசிய சேவையில் இருப்போருக்கு மட்டும் அக்.5 முதல் புறநகர் ரயில் சேவை’

Tamil Mint

குறையும் பாதிப்புகள், அதிகரிக்கும் மரணங்கள்: அதிகாரிகளை குழப்பும் கொரோனா

Tamil Mint

“பள்ளி கட்டணத்தில் முதல் தவணையான 40% கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க போவதில்லை”

Tamil Mint

கோவையில் கடைகள் இயங்க நேரக் கட்டுப்பாடு : மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

suma lekha