இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜின் தந்தை மரணம்


ஹைதராபாத்தில் நுரையீரல் வியாதி காரணமாக சிராஜின் தந்தை முகமது கவுஸ் (53) இன்று காலமானார். 

இந்திய அணியுடன் தற்பொழுது ஆஸ்திரேலியாவில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தனது தந்தையின் மறைவு செய்தியை கேட்டு மிகவும் வருந்தினார். 

பின்னர் அவர் என் தந்தையின் ஆசை நான் இந்நாட்டுக்காக பெருமை சேர்க்க வேண்டும் என்பதே. அதை நிச்சயம் நிறைவேற்றுவேன் எனக் கூறினார். 

மேலும் சிராஜ் தனது மூத்த சகோதரரை தனது ஏழு வயதிலேயே இழந்துவிட்டார். 

Also Read  சாட்சியங்கள் இல்லாத அவமானங்கள் குற்றமாகாது - சுப்ரீம் கோர்ட்

“என் ஆரம்ப நாட்களில் ஆட்டோ ரிக்‌ஷாவை ஓட்டுவதில் என் அப்பா என்ன வகையான கஷ்டங்களை எதிர்கொண்டார் என்பது எனக்குத் தெரியும்” என்றும் சிராஜ் கூறினார். 

2016-2017 ரஞ்சி டிராபி சீசனில் 41 விக்கெட்டுகள் வீழ்த்தி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்காக  ஐபிஎல்லில்  விளையாடும் வாய்ப்பை பெற்றார். மேலும் அவரை அந்த அணி ரூபாய்  2.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 

Also Read  வரதட்சணை கொடுமை விவகாரம் - கேரள அரசு அதிரடி உத்தரவு..!

“இது அதிர்ச்சியளிக்கிறது. நான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆதரவை இழந்தேன். நான் நாட்டிற்காக விளையாடுவதைப் பார்ப்பது அவருடைய கனவாக இருந்தது, அதை உணர்ந்து அவருக்கு மகிழ்ச்சியைத் தருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ”என்று சிராஜ் தெரிவித்தார். 

“இச்செய்தி குறித்து பயிற்சியாளர் சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் என்னை தைரியமாக இருக்கச் சொன்னார்கள், எல்லா ஆதரவையும் வழங்குகிறார்கள், ”என்றும் சிராஜ் கூறினார். 

Also Read  அயன் பட பாணியில் தங்கத்தை கடத்த முயன்ற நபர்… சிக்கியது எப்படி?

கொரோனா தொற்று காரணத்தால் சிராஜால் தனது தந்தையின் இறுதி சடங்குகளில் பங்குபெறமுடியாத நிலையில் உள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அன்லாக் 4.0: மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி

Tamil Mint

கணவன் மனைவி ஈகோவை காரணியாக கருதி வெளியே விட வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

Shanmugapriya

16,000 அடி உயரத்தில் இந்திய ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை

Tamil Mint

விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா! – ஏப்ரல் 6ம் தேதி முதல் ஊரடங்கு!

Lekha Shree

ஏடிஎம்மில் ஐந்து ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணமா?

Tamil Mint

மழையில் ஜாலியாக நடனமாடிய வனத்துறை பெண் ஊழியர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Shanmugapriya

உள்நாட்டு விமான கட்டணம் உயர்வு; எப்போதிருந்து தெரியுமா?

Shanmugapriya

புதுச்சேரியில் மேலும் நீட்டிக்கப்படும் ஊரடங்கு – எவ்வளவு நாட்களுக்கு தெரியுமா?

sathya suganthi

ESI, EPF திட்டத்தில் தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் அறிவிப்பு…!

sathya suganthi

இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர் தேர்வு

Tamil Mint

டெரர் காட்டிய டெல்லி, பதுங்கிய பீஜிங்: எல்லையில் நடந்தது என்ன?

Tamil Mint

கொரோனா பரவலை தடுக்க காற்றோட்டம் முக்கியம் – மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறை

sathya suganthi