இன்னும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை மையம்


நிவர் புயல் வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 24 மணி நேரத்தில் புயலாக வலுப் பெறும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து தென் கிழக்கு திசையில் 740 கி.மீ மையம் கொண்டிருக்கும் புயலுக்கு ‛நிவர்’என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்புயல் நாளை மறுநாள் நவ.,25ம் தேதி பிற்பகலில் மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read  ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை...!

புயல் கரை கடக்கும் பொழுது மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் புயல்காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. அதனால் சென்னை, புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. 

ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர். 

அந்தமான் & சுமித்ரா தீவுகளிடையே உருவாகியுள்ளப் இந்த புயல் 90 கி.மீ., வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் புயல் சுற்றறளவில் பெரியது என்பதால், அனைத்து இடங்களிலும் (சென்னை முதல் கன்னியாகுமரி வரை) அதிக மழை பொழியும்.

Also Read  பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது, அதிமுக செயற்குழு

நவம்பர் 24,25,26,27 தேதிகளில் தமிழகம்  முழுவதும் மற்றும் புதுவையிலும் கனமழை அல்லது மிக கனமழை பொழியும்.

இந்தப் புயலானது நவம்பர் 25 மாலை முதல் நவம்பர் 26 காலை வரை (140 கி.மீ., வேகத்துக்கு மேல்)  டெல்டா மாவட்டங்கள் வழியாக (நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, திருச்சி,  தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை,  காரைக்கால்) கடலூர், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி,  கோவை ஆகிய மாவட்டங்களை கடந்து கேரள மாநிலம் வழியே அபிக்கடல் சென்றடையும்.

Also Read  அமலுக்கு வந்தது அபராதம்: துப்பினால், முக கவசம் அணியாவிட்டால் ஃபைன் கட்ட தயாராகுங்கள்

புயல் கரையை நெருங்கும் பொழுதும் & கடக்கும் பொழுதும், காற்றுடன் கனமழை பொழியும். எனவே பாதுகாப்பு பணிக்காக 42000 பேரிடர் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். 

மேலும் இந்த நாட்களில், பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப் படும்.

மழையும், புயலும் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே இருப்பு வைத்துக் கொள்ளவும் முன் எச்சரிக்கையோடு மிக கவனமாக பாதுகாப்போடு இருக்கவும் அதிகாரிகள் ஆலோசனை அளித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அரசுப் பள்ளிகளில் இனி 6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம்

Devaraj

தமிழகம்: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!

Lekha Shree

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிச.14-ம் தேதி முதல் 2021, ஜன.4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Tamil Mint

நடமாடும் நகைக்கடை…! ஹரி நாடாரின் சொத்து மதிப்பு எவ்வளவா?

Devaraj

11 எம்எல்ஏக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகும் சபாநாயகர்

Tamil Mint

என் பிரண்டை போல யாரு மச்சான்… நண்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய விஜய்

Tamil Mint

வேளாண் பட்ஜெட் 2021: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Lekha Shree

பிற்பகல் 1 மணி வரை காய்கறி, பழங்கள் விற்பனை – உதவி எண் அறிவிப்பு

sathya suganthi

தமிழக அரசின் தலைமை கொறடாவாக கோவி. செழியன் நியமனம்..

Ramya Tamil

தமிழக அரசியலில் எழுதப்படாத சப்ஜெக்ட் சசிகலா…!

Lekha Shree

“யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார்?” – கே.டி.ராகவன் வீடியோ விவகாரம் குறித்து சீமான் பரபரப்பு கருத்து..!

Lekha Shree

“கல்லூரிகளில் சேர வரும் 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் பொன்முடி

Lekha Shree