உ.பி யில் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீர் திட்டம்


உ.பி யில் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீர் என்ற திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் அவர் சுயச்சார்பு கிராமங்களின் தேவையையும் வலியுறுத்தினார்.

உத்தர பிரதேசத்தின் விந்தியா பிராந்தியத்தில் உள்ள சோன்பத்ரா மற்றும் மிர்சாபூருக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீர் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. 

காணொளி வாயிலாக நடந்த இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்றனர். 

இத்திட்டம் ரூ.5,555.38 கோடி மதிப்பிலானது. மேலும் இத்திட்டம் இரண்டு மாவட்டங்களில் உள்ள 41 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read  உச்சத்தில் கொரோனா - 3 லட்சத்தை நெருங்கிய தினசரி பாதிப்பு எண்ணிக்கை…!

“இப்பகுதியில் பல ஆறுகள் இருந்தபோதிலும் குடிநீர் பிரச்னை காணப்பட்டது. இந்த அரசாங்கம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டதுள்ளது. அதன் விளைவாக இன்று ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சுயச்சார்பு கொண்ட கிராமங்கள், சுயச்சார்பு இந்தியாவுக்கு வலு சேர்க்கின்றன” என பிரதமர் மோடி கூறினார்.

இதை அடுத்து பேசிய முதல்வர் ஆதித்யநாத் “சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரை 398 கிராமங்களுக்கு மட்டுமே குழாய் குடிநீர் கிடைத்துள்ளது. இப்போது, ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் 2,995 கிராமங்கள் பயனடையப் போகிறது. இத்திட்டத்தால் மிர்சாபூரில் 21,87,980 கிராம மக்கள் பயனடைவார்கள். சோன்பத்ராவில், 19,53,458 குடும்பங்கள் பயனடைவார்கள். ஏரிகள் மற்றும் ஆற்றின் நீர் சுத்திகரிக்கப்பட்டு சோன்பத்ராவில் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Also Read  "தமிழகத்துடன் பேசுவது நம் கவுரவத்துக்கு ஆகாது!" - கர்நாடக மாநில காங்., தலைவர் ஆவேசம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அரசுப் பள்ளியில் 9-12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு லேப்-டாப்…! முதலமைச்சரின் அதிரடி உத்தரவு…!

sathya suganthi

இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் – துணை முதல்வர்

Tamil Mint

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை 1 மணிநேரம் வீட்டில் வைத்து சடங்கு செய்யலாம்!

Lekha Shree

கொரோன தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டாம் – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

Tamil Mint

வெளிநாட்டு வாழ் இந்திய இளைஞர்களை தாக்கும் இருதய நோய்….. மருத்துவர்கள் எச்சரிக்கை…

VIGNESH PERUMAL

ஒரு கோடி டோஸ் கோவிஷீல்டு வாங்கும் கர்நாடகா…!

Lekha Shree

இன்று சிவப்பு கோள் தினம்

Tamil Mint

இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Shanmugapriya

காதல் மனைவியை துண்டுதுண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்த கொடூரன் – ஆந்திராவில் பகீர் சம்பவம்…!

sathya suganthi

வாட்ஸ் ஆப் மீது சட்ட நடவடிக்கை – மத்திய எச்சரிக்கை

sathya suganthi

யாஸ் புயல் சேதங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் – பாதியில் வெளியேறிய முதல்வர் மம்தா பானர்ஜி!

Lekha Shree

கருப்பு பூஞ்சை விட பலமடங்கு அச்சுறுத்தும் வெள்ளை பூஞ்சை நோய்…!

Lekha Shree