“எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும், வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடி பொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது”: மு.க. ஸ்டாலின்


நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு விஜயம் செய்தார். மேலும் அவர் உரையில் திமுக., குறித்து ஊழல் மற்றும் வாரிசு அரசியல் சம்பந்தமான விமர்சனங்களை வைத்தார். 

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கூட்டணி விவகாரம் மற்றும் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று சென்னை வந்திருந்தார். 

Also Read  திருப்பதி கோயிலில் நள்ளிரவில் பக்தர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

கலைவாணர் அரங்கில் நடந்த பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கான விழாவில் பேசிய அவர் “அலைக்கற்றை ஒதுக்கீட்டில், 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான தி.மு.க.,வுக்கு, ஊழல் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?” என கேள்வி எழுப்பினார். 

மேலும் வரும் சட்டசபை தேர்தலில், குடும்ப கட்சிகளையும், வாரிசு அரசியலையும் ஒழித்து, தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவர் என்றும் அவர் உறுதியாக கூறினார்.

Also Read  கொரோனா தடுப்பூசி மீது தவறில்லை; மருத்துவர்கள் விளக்கம்

இதனைத் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் 2ஜி உள்ளிட்ட ஊழல்களையும், வாரிசு தொடர்பான அரசியலுக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து கட்சியில் வழங்கப்பட்டு வரும் முன்னுரிமைகளை சுட்டிக்காட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர் மக்கள். 

இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று திமுக தலைவர் பின்வருமாறு பதில் அளித்துள்ளார்.

Also Read  தேர்தல் ஆணைய குழு இன்று சென்னை வருகை!

”நாளொரு ஊழலும், பொழுதொரு கொள்ளையுமாக அரசு கஜானாவை சுரண்டிக் கொழுத்து, நான்காண்டுகள் ஆட்சி செய்த இரட்டையர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, டில்லி சாணக்கியர், எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும், வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடி பொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது.” 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை: அதிமுக-வின் அலட்சியம் தோலுரிக்கப்பட்டதா.?

mani maran

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த தமிழக அரசு, அடம்பிடிக்கும் இந்து அமைப்புகள்

Tamil Mint

ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போடப் போகிறீர்களா? உங்களுக்கான அறிவுரைகள் இதோ…!

sathya suganthi

பிளஸ் 2 சிறப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? அமைச்சர் தகவல்

Tamil Mint

பிக்பாஸ் வீட்டில் வம்பு சண்டை இழுக்கும் சுரேஷ்… ஆவேசமான வேல்முருகன்

Tamil Mint

பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளின் அப்பட்டமான மனித உரிமை மீறல் !?

Tamil Mint

தமிழகம்: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

Lekha Shree

கோவையில் திடீரென பிரபலமான கொரோனா தேவி அம்மன்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

3 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் ‘டேப்லெட்’; செங்கோட்டையன் அறிவிப்பு!

Tamil Mint

பிதாமகன், சானக்கியன் போல் பேசி வருகிறார் – குருமூர்த்தி கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

Tamil Mint

வணக்கம் சொன்ன உதயநிதி.. கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிசாமி…

Ramya Tamil