எந்த தவறும் செய்யாத நான் விசாரணை ஆணையை எதிர்கொள்ள தயார்: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா


அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை ஆணைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இவ்விசாரணையை  மேற்கொள்ள ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி. கலையரசனை நியமித்துள்ளது தமிழக அரசு. 

அண்ணா பல்கலைக்கழக சட்டம், 1978-ன் கீழ் திரு. கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரி தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

Also Read  திமுக வேட்பாளர் பட்டியலில் 49 புதுமுகங்களுக்கு வாய்ப்பு..!

திரு. சூரப்பவின் ஆட்சி காலத்தில் கல்வி மற்றும் நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்ட நியமனங்கள் மற்றும் ஆட்சேர்புகளையும் மேலும் கட்டணம், உதவித்தொகை, நன்கொடைகள், மானியங்கள் போன்றவற்றின்மூலம் அவர் பெற்ற  தொகைகள் குறித்தும் விசாரணை அதிகாரி விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

“இதுபோன்ற குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், எதிகாலத்தில் இது போன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க இவ்விசாரணை வழிவகுக்கும்” என அரசு ஆணை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read  45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி - தமிழக அரசு அதிரடி உத்தரவு

இதனைத்தொடர்ந்து சூரப்பா அளித்த பேட்டியில் அவர் “எனக்கு எதிராக தமிழக அரசு விசாரணை குழு அமைத்துள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என் மகள் அண்ணா பல்கலைக்கழகத்தில்  பணிபுரியவில்லை; எந்த ஒரு முறைகேட்டிலும் ஈடுபடாத நான் ஏன் பதவி விலக வேண்டும்? நான் ஒரு பைசா கூட கையூட்டு வாங்கியது இல்லை; எந்த தவறும் செய்யாத எனக்கு விசாரணை ஆணையத்தை எதிர்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை” எனக் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மூக்கு வழி செல்லும் மருந்துதான் குழந்தைகளிடம் கொரோனா தொற்றை தடுக்கும் – மருத்துவர்

sathya suganthi

நான் மட்டுமே கருணாநிதியின் மகன் அல்ல: ஸ்டாலின் உருக்கமான பேச்சு

Tamil Mint

நோ கமெண்ட்ஸ்: விஜய்யின் அறிக்கை பற்றி எஸ்ஏசி

Tamil Mint

இந்த 5 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு – ஆய்வு நடத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு…!

sathya suganthi

ஐசியூவில் ஆ.ராசா மனைவி! நேரில் சென்று விசாரித்த மு.க.ஸ்டாலின்!

Lekha Shree

வி.கே.சசிகலா மீது வழக்குப்பதிவு – சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்

sathya suganthi

10 எண்றத்துக்குள்ள.. ஈபிஎஸ் கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்…

Tamil Mint

முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க இணையதளம் தொடக்கம்

sathya suganthi

கொரோனா அப்டேட் – தமிழகத்தில் ஒரே நாளில் 397 பேர் பலி!

Lekha Shree

பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது

sathya suganthi

வேலையில்லா திண்டாட்டத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தி போஸ்டர்! வேலையில்லா இளைஞர்களின் அட்ராசிட்டி!

Tamil Mint

கந்துவட்டியால் நடந்த கொடூரம்… வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டு இளைஞர் தற்கொலை..!

Lekha Shree