a

“எனக்கு யாராலும் எண்டு கார்டு போட முடியாது ராசா!” – கண்ணீர் அஞ்சலி போஸ்டர்-ஐ பார்த்து கொதித்த நடிகை விந்தியா!


உயிருடன் இருக்கும் இருக்கும் நடிகை. விந்தியாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கமம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் விந்தியா. அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது.

ஆனால் சில படங்களுக்கு அடுத்து அவருக்கு வாய்ப்பு குறையத் தொடங்கிவிட்டது. அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு நடிகை பானுப்பிரியாவின் சகோதரர் கிருஷ்ணனை விந்தியா திருமணம் செய்து கொண்டார்.

எனினும் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக 2012ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

Also Read  தமிழகத்தின் புதிய அமைச்சரவை…! வைரலாகும் குரூப் போட்டோ

அதன் பின்னர் சில படங்களில் நடித்தும் அவை சரியாக ஓடவில்லை என்ற காரணத்தால் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

அதிமுகவிற்கு தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் அவர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு பதிவுக்கு முன்னரும் அதிமுகவிற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார்.

Also Read  யார் யாருக்கு அமைச்சர் பதவி…? முழு விவரம் இதோ…!

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு யாரோ கண்ணீர் அஞ்சலி போஸ்டர் உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டு பதிவிட்ட நடிகை விந்தியா, ” உலகத்திலேயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பார்த்து சிரிக்கிற அதிர்ஷ்டசாலிகள் இல்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு முதல்வரே என்று குறிப்பிட்டு அறுத்து விட்டார்கள் போல.

இந்த மாதிரி போஸ்டரைப் பார்த்தால் ஆயில் கூடுமாம். எனக்கு அந்த கடவுளைத் தவிர யாராலும் எண்டு கார்டு போட முடியாது ராசா” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read  'மாஸ்டர்' பட நடிகருக்கு 'மக்கள் செல்வன்' நேரில் சென்று வாழ்த்து…! காரணம் இதுதான்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலிவுட் கொடுத்த ஏமாற்றம்… சுஷாந்த்தை தொடர்ந்து நண்பர் நடிகரும் தற்கொலை…!

Tamil Mint

‘திரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம் இதோ..!

Lekha Shree

கணவர் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கிய ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை!

Lekha Shree

‘மழை வந்துடுச்சாமே’ ரசிகர்களுக்காக பிரியா பவானிசங்கர் வெளியிட்ட புகைப்படம் இதோ!

Lekha Shree

வாழும் தெய்வம்! – அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கொடுத்த சோனு சூட்!

Shanmugapriya

விவேக் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

Jaya Thilagan

நெட்ஃபிலிக்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்த நவரசா ப்ரோமோ வெளியீடு – ரசிகர்கள் குஷி

HariHara Suthan

அருண் விஜய்யின் ’பார்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! முகத்தின் ஒரு பாதியில் இந்தியா மேப், வைரலாகும் போஸ்டர் இதோ…

HariHara Suthan

மக்கள் செல்வனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்… வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

ஒரு நடிகருடன் மட்டும் நடிக்க ஆசைப்பட்டால் வேலைக்காவாது, நம்ம ரூட்டே வேற.. பக்கா ப்ளானுடன் இருக்கும் வாணி போஜன்!

HariHara Suthan

வலிமை பட அப்டேட்… டீசர் வெளியீட்டு தேதி குறித்து முடிவு?

Tamil Mint

விஜய்யோடு அடுத்து ஜோடி போடப்போவது யார்?…. 3 ஹீரோயின்களிடையே நடக்கும் போட்டி…!

Tamil Mint