ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை வேறு உபயோகத்துக்குப் பயன்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளர் டி.கே.சண்முகம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தாலுகா, மேனாம்பேடு கிராமம் மற்றும் கொரட்டூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒழுங்குபடுத்தி, வரன்முறை செய்து பட்டா தர உத்தரவிட வேண்டும். நீர் இல்லாமல், குடிநீருக்கோ, பாசனத்துக்கோ நீண்டகாலம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நீர் ஆதாரங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் அங்கு பட்டா கொடுப்பதற்கு வகை செய்யும் அரசாணை 30-12-2006-ல் பிறக்கப்பட்டது. அதன்படி, கொரட்டூர் ஏரி நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அங்கு ஆக்கிரமித்திருப்பவர்களுக்கு பட்டா தர வேண்டும்” என்று கோரியிருந்தார். 

Also Read  கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டால் குழந்தை எதிர்ப்பு சக்தியுடன் பிறக்குமா?

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், நீர் நிலைகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லும் என்று உத்தரவிட்டது.

மற்றொரு வழக்கில், நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்று காரணம் காட்டி, அங்கு ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

இரண்டு டிவிஷன் பெஞ்ச்களின் தீர்ப்பு முரண்பட்டதாக இருந்ததால், இந்த வழக்கு இரண்டு பேருக்கு மேற்பட்ட நீதிபதிகள் (முழு அமர்வு) விசாரணைக்கு அனுப்பப்பட்டது. 

இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்திய நாராயணன், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முழு அமர்வு விசாரித்து, “நீர் ஆதாரங்கள் சட்டத்தின் நோக்கமே நீர் நிலைகளைப் பாதுகாப்பதுதான். பிரதான வழக்கை மீண்டும் டிவிஷன் பெஞ்ச் விசாரிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி இந்த வழக்கை விசாரித்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட முதல் அமர்வு விசாரித்து பிறப்பித்த தீர்ப்பு வருமாறு:

ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் பொதுமக்களின் சொத்து. அதே நேரத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமே இருப்பதாக கொள்ளக்கூடாது. பொதுமக்களுக்கும் அதில் பங்கு உள்ளது. மக்கள் அதிக சொத்து வாங்க வேண்டும் என்ற ஆசைப்படுவதால் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. நீர் நிலைகள் மனிதன் மற்றும் கால்நடைகளின் ஆதாரமாக இருக்கிறது.

Also Read  விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது: முதல்வர் பழனிசாமி

2007-ல் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு சட்டம் இயற்றியது. அரசே இந்த சட்டத்தை மறந்து, இயற்கை ஆதாரங்களை அழிக்க முற்படும்போது அதை மக்கள் எதிர்க்கின்றனர். நீர் நிலைகளை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. அதுபோல உயர் நீதிமன்றமும் பல உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. ஆனால், அந்த உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை.

Also Read  பா.ஜ.க.வால் தான் அதிமுக தோற்றது...! சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு...!

அதனால், 2005-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் உயிர் மற்றும் பொருள் இழப்பு ஏற்பட்டது. இப்போது ஏற்பட்ட வெள்ளத்திலும் உயிர் மற்றும் பொருள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தவறான நிர்வாகமும், அதிகாரிகள் பின்பற்றும் நடைமுறைகளே காரணம். நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதால், அங்கு தேங்க வேண்டிய மழைநீர் வெளியேறி மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. மழை வெள்ளத்தில் வீடுகள் மூழ்குகின்றன. நீர்நிலைகளுக்கு உள்ளே வீடுகள் கட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இதுபோல நீர்நிலைகளை அழிக்க அனுமதிக்க முடியாது. நீர் நிலைகளை வேறு உபயோகத்துக்கு பயன்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை.

இந்த வழக்கில், ஏரிக்குள் நீண்டகாலமாக இருப்பதாக கூறுவதற்கு ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்கபடவில்லை. அப்படியே இருந்தாலும் அந்த இடத்தில் அவர்களுக்கு உரிமை இல்லை. ஏனென்றால் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப் படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு..! சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை!

Lekha Shree

செருப்பை தூக்கிச் சென்ற தலித் நிர்வாகி சர்ச்சையில் சிக்கிய திமுக எம்.எல்.ஏ.!

Tamil Mint

“அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை” – கமல்ஹாசன் காட்டம்!

Lekha Shree

ராமநாதபுரத்தில் நெசவாளர்கள் மற்றும் சிறுவணிகர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி கலந்துரையாடல்

Tamil Mint

”போக்சோ சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!

Tamil Mint

“தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டமில்லை” – கொங்குநாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!

Lekha Shree

மீம்ஸ்களை நிஜமாக்கிய ஆண்…! பெண் போல் வேடமிட்டு பஸ்ஸில் பயணம்…!

sathya suganthi

திருட முயன்று ஏடிஎம் இயந்திரத்திற்குள் சிக்கிய திருடன்… நாமக்கல்லில் நிகழ்ந்த வேடிக்கை சம்பவம்..!

Lekha Shree

ஒரு 100 ரூபாய் வைக்க மாட்டியா? – துரைமுருகனை கலாய்த்துச் சென்ற திருடர்கள்

Devaraj

செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி வரிஏய்ப்பு: வருமான வரித்துறை

Tamil Mint

PIPETTE பயன்படுத்த வேண்டாம்…! 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான கொரோனா தடுப்பு நெறிமுறைகள்…!

Devaraj

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை…. மக்கள் வாழ தகுதி இழந்த நகராக மாறி வருகிறது…..

Devaraj