a

பிரதமர் மோடி முதல் யோகி வரை – யாரையும் விட்டுவைக்காத சித்தார்த்


உத்தரப்பிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வரும் மருத்துவமனைகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.

இதற்கு, பதிலளிக்கும் விதமாக சாமானியனோ, சாமியாரோ, அரசியல் தலைவரோ யாராக இருந்தாலும் பொய் சொன்னால் அவர்களுக்கு ஓங்கி ஓர் அறை விழும் என நடிகர் சித்தார்த் சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு பா.ஜ.க தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாடு பா.ஜ.க-வினர் தனது மொபைல் எண்ணை வெளியிட்டதாகவும், 500-க்கும் மேற்பட்ட அழைப்புகளில் தனக்கும் தனது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளில் திட்டி, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் விடப்படுவதாகவும் சித்தார்த் ட்வீட் செய்திருந்தார்.

இதையடுத்து சித்தார்த்துக்கு சமூக ஊடகங்களில் ஆதரவு தெரிவித்து #Isupportsiddarth என்ர ஹேஷ்டேக் ட்ரெண்டானது. தனக்கு வரும் மிரட்டல்களைப் பார்த்து தன் அம்மா மிகவும் பயந்துவிட்டார் என்றும் அவருக்குத் தைரியம் சொல்ல தன்னிடம் வார்த்தைகள் இல்லை என்ற போதிலும் ஆதரவாளர்களின் ட்வீட்களைதான் அவர்களிடம் படித்து காட்டி சமாதானம் செய்ததாகவும் சித்தார்த் குறிப்பிட்டுள்ளனார். மேலும் தன்னுடன் துணைநின்ற அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

Also Read  ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார் - கமல்ஹாசன்.

கொரோனா பேரிடர் சமயத்தில் முறையாக செயல்படாத அதிகார வர்க்கங்களை விமர்சித்து வரும் சித்தார்த், அத்தோடு நிற்காமல் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வுகள், சிகிச்சை மையங்கள், உதவி தேவைப்படுவோருக்கான வழிகாட்டுதல் என ட்விட்டர் மூலமாக பல உதவிகளை செய்து வருகிறார்.

தற்போது மட்டுமின்றி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்திய போது, வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தபோது என மக்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் சித்தார்த் விமர்சித்துள்ளார்.

Also Read  “பழைய ரூ.100, ரூ.10 மற்றும் ரூ.5 நோட்டுகள் திரும்ப பெறப்படாது” - ரிசர்வ் வங்கி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அரசு, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரை சித்தார்த்தின் ட்விட்டர் விமர்சனத்தில் இருந்து தப்பியவர்கள் இல்லை.

மத்திய அரசை மட்டுமின்றி 2015-ல் சென்னை பெருவெள்ளத்தைக் கண்டுகொள்ளாத வட இந்திய ஊடகங்கள், 2017-ல் 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பில் தி.மு.க-வின் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டபோதும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அ.தி.மு.க ஆதரவளித்த போதும் அவர்கள் மீதும் விமர்சனங்கள் வைத்திருக்கிறார்.

Also Read  குப்பை கொட்ட ரோட்டிற்கு வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குங்குமம் கொடுத்ததில் வந்த பிரச்சனை…. கல்யாணத்தை நிறுத்திய மணமகன் வீட்டின் மீது பெண் வீட்டார் புகார்…

VIGNESH PERUMAL

திரைப்பட பாணியில் கவர்ச்சி காட்டி தொழிலதிபர்களை ஏமாற்றிய இளம்பெண்….

VIGNESH PERUMAL

அயன்பட பாணியில் விமானத்தில் தங்கம் கடத்திய இருவர்….. சுங்கத்துறை பறிமுதல்…

VIGNESH PERUMAL

குக் வித் கோமாளிக்கு போட்டியாக களமிறங்கும் பிரபல நடிகர்…….

VIGNESH PERUMAL

குடிபோதையில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி வெட்டிய கணவன் கைது…

VIGNESH PERUMAL

பெண்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய அரக்கன் கைது…

VIGNESH PERUMAL

பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற பறவை! – வைரல் வீடியோ

Shanmugapriya

தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது OTT தளங்கள் மற்றும் ஆன்லைன் செய்தி தளங்கள்

Tamil Mint

மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை! – காரிலேயே உயிரிழந்த பெண்!

Shanmugapriya

சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!

VIGNESH PERUMAL

உலகம் முழுவதும் வெவ்வேறு புதுவகையான கொரோனா பரவி வருகிறது… தடுப்பு மருந்து வேலை செய்கிறதா என ஆய்வு…. உலக சுகாதார நிறுவனம்…

VIGNESH PERUMAL

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஷேன் வாட்சன் அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வு முடிவை வீடியோ மூலம் அறிவித்துள்ளார் .

Tamil Mint