குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்: கொரோனா விதிகளை மீறியதாக கைதாகி 8 மணி நேரத்துக்குப்பின் விடுதலை


ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல் கூட்டம் கூட்டியதாகக் கைது செய்யப்பட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 8 மணி நேரத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.

“விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுவரும் அவர், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நேற்று கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டார்.

Also Read  தாயை குளியல் அறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்த மகன்!

இரவு 10 மணி தாண்டியும் உதயநிதி விடுதலை செய்யப்படாததால் தி.மு.கவினர் மண்டப வாயிலில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையிலான போலீசார், பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் 11 மணிக்கு உதயநிதி விடுதலை செய்யப்பட்டார்.

Also Read  PIPETTE பயன்படுத்த வேண்டாம்...! 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான கொரோனா தடுப்பு நெறிமுறைகள்...!

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் சாக்கோட்டையில் கொடியேற்றிவிட்டு, கும்பகோணம் விடுதியில் தங்கினார். 

இன்று கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவையாறு பகுதிகளில் உதயநிதி பிரசாரம் மேற்கொள்கிறார்.

முன்பு அவர் நாகையில் பிரச்சாரம் செய்தபோதும் கைதாகி விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. என்ன நேர்ந்தாலும் திட்டமிட்டபடி திமுக தேர்தல் பிரச்சாரத்தை தொடரும் எனவும் அவர் உறுதியாக கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல”

Tamil Mint

பிரதமரின் சென்னை வருகைக்கு முதல் எதிர்ப்பு… ட்விட்டரில் #GoBackModi என பதிவிட்ட பிக்பாஸ் ஓவியா…!

Tamil Mint

மதுரை: ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் சரக்கு ஆட்டோவில் கொண்டுசெல்லப்பட்ட கொரோனா நோயாளி!

Lekha Shree

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

Tamil Mint

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மீண்டும் தொடங்கும் “நீட்” பயிற்சி…!

Devaraj

பீலா ராஜேஷ் கணவர் ராஜேஷ் தாஸ் மீது பெண் எஸ்.பி. பாலியல் புகார்! முழு விவரம்!

Lekha Shree

சசிகலா வந்தாச்சு… அடுத்தது என்ன?

Tamil Mint

ஊரடங்கு உத்தரவை மீறி இறுதி ஊர்வலத்துக்கு திரண்ட மக்கள்… யாருக்காக தெரியுமா?

Lekha Shree

தி.மு.க., வுடன் கூட்டணி இல்லை: கமல்ஹாசன் திட்டவட்டம்

Tamil Mint

“வரும் 21ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை” – சபாநாயகர் அப்பாவு

Lekha Shree

தமிழக அரசு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..

Ramya Tamil

பிரச்சாரத்துக்கு வரும் பிரதமர் மோடி, அமித்ஷா…! இந்த தேர்தலாவது பாஜகவுக்கு கைக் கொடுக்குமா?

Devaraj