கொரோனாவுக்கு ராஜஸ்தான் பெண் எம்.எல்.ஏ பலி


ராஜஸ்தானின் ராஜ்சமந்த் தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. கிரண் மகேஸ்வரி.  இவருக்கு கடந்த சில நாட்களுக்க முன் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.  அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் அதில் பலனின்றி அவர் காலமானார்.  அவருக்கு வயது 59.

Also Read  பொறியியல் பாடங்களை இனி தமிழில் படிக்கலாம் - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி

கடந்த 1994ம் ஆண்டு நடந்த நகராட்சி கவுன்சிலில் வெற்றி பெற்று தலைவரானார் கிரண். அதைத்தொடர்ந்து 1999ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் மேயர் பொறுப்பில் இருந்துள்ளார்.  மேலும் பா.ஜ.க.வில் ராஜஸ்தான் பிரதேச மகளிர் அணியின் தலைவராக கடந்த 2000ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் 2006ம் ஆண்டு மகளிர் அணி தேசிய தலைவராகவும், 2011ம் ஆண்டு அக்கட்சியின் தேசிய பொது செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.

Also Read  "யாரும் இங்கே சூப்பர் ஹீரோக்கள் இல்லை" - பெண் மருத்துவர் கண்ணீர் மல்க வீடியோ

சென்ற 14வது மக்களவை தேர்தலில் உதய்பூர்-ராஜ்சமந்த் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானார். 

மேலும் 2013ம் ஆண்டு ராஜஸ்தானின் ராஜ்சமந்த் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.  பா.ஜ.க. தேசிய துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.  

Also Read  புதுச்சேரி நிலவரம்: என்.ஆர்.காங்கிரஸா…! காங்கிரஸா…!

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துதுள்ளனர்.

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“மக்கள்தொகை பெருக்கம் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது!” – யோகி ஆதித்யநாத்

Lekha Shree

புடவை அணிந்து வந்ததால் உணவகத்திற்குள் அனுமதி மறுப்பு? பெண் பத்திரிகையாளர் குற்றச்சாட்டு..!

Lekha Shree

இந்தியாவில் கொரோனா தொற்றின் உயிர் இழப்பின் எண்ணிக்கை 1.50 சதவீதம் குறைந்துள்ளது – சுகாதார அமைச்சகம்

Tamil Mint

பிரபல இந்தி நடிகரும், பாஜக எம்.பி.யுமான சன்னி தியோலுக்கு கொரோனா

Tamil Mint

புதுச்சேரி முதலமைச்சருக்கு கொரோனா…! தள்ளிப்போகும் அமைச்சரவை பதவியேற்பு…!

sathya suganthi

கப்புல் அவுட்டிங் – வைரலாகும் விராட் கோலி-அனுஷ்கா சர்மா புகைப்படங்கள்!

Lekha Shree

விமான கட்டணங்கள் 30 சதவீதம் உயர்வு – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

Tamil Mint

அடி குழாயில் தண்ணீர் பிடிக்கும் குட்டியானை! – இணையத்தில் வைரலாகும் க்யூட் வீடியோ

Shanmugapriya

மகாராஷ்டிராவில் கொரோனா 3வது அலைக்கு வாய்ப்பு – நிபுணர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்…!

Devaraj

புனேவில் உள்ள சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் திடீர் தீ; 5 பேர் உயிரிழந்த சோகம்!

Tamil Mint

கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு : இல்லத்தரசிகள் ஷாக்

suma lekha

கொரோனாவில் இருந்து மீண்ட தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்!

Lekha Shree