‘கோவிஷீல்ட்’ தன்னார்வலரின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா


கோவிட் -19 தடுப்பூசியான ‘கோவிட்ஷீல்ட்’ தயாரிப்பதற்காக புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனெகாவுடன் இணைந்து செயல்பட்டு, இந்தியாவில் சோதனைகளை நடத்தி வருகிறது. 

இதைத்தொடர்ந்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி பரிசோதனையில் தன்னார்வலர் ஒருவர் பங்கேற்றுள்ளார். அவருக்கு வயது நாற்பது. 

Also Read  கொரோனா சிகிச்சை பணியிலிருந்து மருத்துவர் வீரபாபு விலகல்: பரபரப்பு பின்னணி தகவல்கள்

சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்றது. தடுப்பூசி போடப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு சில உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக கூறி, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிற்கு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கையை முற்றிலுமாக மறுத்துள்ளது அந்நிறுவனம். தடுப்பூசிக்கும் அவருக்கு ஏற்பட்டுள்ள உடல் உபாதைகளுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை எனக் கூறி அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். 

Also Read  இந்தியா-பிரிட்டன் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

“அறிவிப்பில் உள்ள குற்றச்சாட்டுகள் தவறானதாகும் . சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, தன்னார்வலரின் மருத்துவ நிலை குறித்து அனுதாபம் கொண்டிருந்தாலும், தடுப்பூசி சோதனைக்கும் தன்னார்வலரின் மருத்துவ நிலைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை ” என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

“இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவதற்குப் பின்னால் உள்நோக்கம் உள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, இதற்காக 100 கோடிக்கு மேல் இழப்பீடு கோரும். ”என்று அந்நிறுவனம் கண்டித்துள்ளது.

Also Read  தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் நடைபெறவுள்ளது ஜல்லிக்கட்டு போட்டிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்… விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிஎஸ்கே வீரர்கள்..!

suma lekha

தலைமை செயலகத்தில் உதயநிதி ஸ்டாலின் படம்? – ஜெயக்குமார் விமர்சனம்..!

Lekha Shree

தமிழகத்தில் நீட் தேர்வு விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை குறைவு..!

suma lekha

கொடைக்கானலில் அதிசய சிலந்தி வலை… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

மும்பை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து – கொரோனா நோயாளிகள் பலர் உயிரிழப்பு!

Lekha Shree

13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை

sathya suganthi

ஆக்சிஜன் செறிவூட்டிகளை வீடுகளுக்கு சென்று வழங்கும் பணியை இலவசமாக செய்ய தயார் – ஓலா நிறுவனம்

Lekha Shree

காலியாக உள்ள 3,500க்கும் அதிகமான நீதிமன்ற வேலை…! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!

sathya suganthi

முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

Ramya Tamil

பிஎஸ்பிபி பள்ளி சம்பவத்தின் எதிரொலி – அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை!

Lekha Shree

“எழுவர் விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதத்தில் உடன்பாடு இல்லை!” – கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேச்சு!

Lekha Shree

வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும்: தமிழக அரசு

Tamil Mint