ஜெயலலிதா நினைவகத்தில் உருவாக்கப்பட்டு வரும் சூப்பர் வசதிகள்


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, சென்னை மெரினாவில், 58 கோடி ரூபாயில், நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. 

ஜெ., உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பிரமாண்டமான பீனிக்ஸ் பறவை வடிவ கட்டிடம் கட்டப்பட  உ ள்ளது. இதன் இடது பகுதியில், ஜெ., அருங்காட்சியம் அமைக்கப்பட உள்ளது. 

இதற்காக, முழுதும் கிரானைட் பதிக்கப்பட்ட கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படங்கள், வீடியோ கண்காட்சி போன்றவை இடம் பெறுகின்றன.

டிஜிட்டல் திரையில், பொதுமக்களின் கேள்விகளுக்கு, ஜெ., பதில் அளிப்பது போன்ற சிறப்பு ஏற்பாடும் செய்யப்படுகிறது. 

Also Read  ஸ்மார்ட் பைக்கை இனி வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்

ஜெ., பிரமாண்ட புகைப்படத்திற்கு, பல வண்ண மலர்களை, பொதுமக்களே கம்ப்யூட்டரில் தேர்வு செய்து துாவும் வசதியும் செய்யப்படுகிறது. 

அவ்வாறு, துாவும் மலரின் வாசமும், அந்த அரங்கில் வீசும். இதேபோல, பீனிக்ஸ் பறவை கட்டடத்தின் வலது பகுதியில், அறிவுசார் பூங்கா  கட்டப்பட்டு உள்ளது.

Also Read  சிதம்பரம்: தலித் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் கைது..! வைரலான வீடியோவால் பரபரப்பு..!

அங்கு, ஜெ., அரசு செயல்படுத்திய, மாணவர்களுக்கான இலவச லேப்டாப், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல் விளக்கங்கள் அமைய உள்ளன.

பராமரிப்புஅருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா பணிகளை மேற்கொள்ள, செய்தி மக்கள் தொடர்பு துறை வாயிலாக, அரசிடம், 12.32 கோடி ரூபாய் கேட்கப்பட்டு இருந்தது.

Also Read  "மு.க. ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ராயபுரம் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும்" - அமைச்சர் ஜெயக்குமார்

அந்த நிதியை, தற்போது அரசு ஒதுக்கி உள்ளது.பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் வாயிலாக, இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 

தற்போது ஒதுக்கப்பட்ட நிதியில், அறிவு சார் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் பராமரிப்பு, சி.சி.டி.வி., கேமரா கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டில்லி லோக்பாலில் புகார் – வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சிக்குமா துணை முதல்வர் ஓபிஎஸ் குடும்பம்!

Tamil Mint

“என் மகன் நிரபராதி; திமுக ஆட்சியில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன்” – ராம்குமார் அப்பா கண்ணீர்..!

Lekha Shree

ஒரு முன்னாள் கொரோனா நோயாளியின் வாக்குமூலம்: உயிர் மீது ஆசை இருந்தால் இதை படிக்கவும்

Tamil Mint

சிவகார்த்திகேயன் தந்தையின் மரணம் குறித்த சர்ச்சை பேச்சு: எச்.ராஜா மீது புகார்!

Lekha Shree

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் நடைபெறவுள்ளது ஜல்லிக்கட்டு போட்டிகள்!

Tamil Mint

சாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளருக்கு உடல்நலக்குறைவு

Tamil Mint

தமிழகத்தில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பாதிப்பு…!

Devaraj

தமிழகத்தில் கனமழை நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமின்!

Lekha Shree

தமிழகம்: 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை..!

Lekha Shree

“பப்ஜி மதன்” மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…!

sathya suganthi

“தோல்வியை சந்தித்தாலும் நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது” – இயக்குனர் சேரன்

Lekha Shree