ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் ஊடுறுவிய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு


இந்திய- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் ஊடுருவப் பயன்படுத்திய 200 மீட்டர் நீள சுரங்கப் பாதையை ராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்ற 4 பயங்கரவாதிகள் நக்ரோட்டா என்ற இடத்தில் உள்ள சுங்கச்சாவடியில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Also Read  மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள் - பாபா ராம்தேவ்

அவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் என்பதும், ஜம்முவில் சதித்திட்டத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன் சென்றதும் பின்னர் தெரிய வந்தது.

தீவிரவாதிகள் 4 பேரும் ஊடுருவியது எப்படி என பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.

அப்போது இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையை ஒட்டிய சம்பா பகுதியில் சுரங்கப்பாதை இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். 

இந்தியப் பகுதியில் 160 மீட்டர், பாகிஸ்தானில் 40 மீட்டர் தூரத்திற்கு 25 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Also Read  ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்கவிட்ட நபர் கைது!

அங்கிருந்த மணல்மூட்டைகளில் கராச்சியில் இருந்து கொண்டு வந்ததற்கான அடையாளங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படை முகாம்கள் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகே சுரங்கப்பாதையின் மறுபகுதி இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் உதவி செய்துள்ளதாகவும், தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பல்வேறு பொருட்கள் ஆயுதங்கள் யாவும் பாகிஸ்தான் ராணுவத்தினரின் முத்திரையுடன் இருப்பதாகவும் எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருமணத்தால் 100 பேருக்கு கொரோனா! – நான்கு பேர் மரணம்!

Shanmugapriya

சபரிமலையில் தினந்தோறும் 25,000 பக்தர்களுக்கு அனுமதி.!

suma lekha

மழையில் ஜாலியாக நடனமாடிய வனத்துறை பெண் ஊழியர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Shanmugapriya

கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டுள்ளது: பிரதமர் மோடி

Tamil Mint

இன்ஸ்டாகிராமில் தீங்கு விளைவிக்கும் பிழை – கண்டுபிடித்த இந்திய மாணவனுக்கு ரூ.22 லட்சம் பரிசு…!

sathya suganthi

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது!

Lekha Shree

கர்நாடக மாநில புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு.!

suma lekha

மது அருந்துபவர்களை கெட்டவர்கள் என்று கூற முடியாது – ப.சிதம்பரம்

Shanmugapriya

ரூ.600 கோடி செலவில் பார்க்; அசத்தும் முகேஷ் அம்பானி

Jaya Thilagan

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்றில் குதித்த இளைஞரை சிறுவன் ஒருவன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினான்.

Tamil Mint

23-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. தமிழகத்தில் மழை பெய்யுமா..?

Ramya Tamil

அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை 2 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ! – குவியும் பாராட்டுகள்!

Tamil Mint