டி.சி.எஸ் ஊழியருக்கு எதிரான மீடூ வழக்கை விரைவாக கண்காணிக்க ஆர்வலர்கள் முதல்வருக்கு கோரிக்கை


ஆகஸ்ட் 2019 இல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஊழியர் ஒருவர் தனது முன்னாள் மேலாளரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக காஞ்சிபுரத்தில் உள்ள தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகினார். 

மார்ச் 2018 இல், யுனைடெட் கிங்டம் தளத்தில் பணிபுரிந்த டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) ஊழியர் பணியிடத்தில் தனது மேலாளரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். 

அவரது புகாரின் அடிப்படையில் நிறுவனம் நடத்திய ஒரு உள் குழு (ஐசி) விசாரணையில், ஊழியரால் சமர்ப்பிக்கப்பட்ட அரட்டைகள் மற்றும் அலுவலக பதிவுகள் உட்பட அணைத்து ஆதாரங்கள் இருந்தபோதிலும் பாலியல் துன்புறுத்தல்களை ‘நிரூபிக்க முடியவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த வழக்கு காஞ்சிபுரத்தில் உள்ள தொழிலாளர் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. 

Also Read  எடப்பாடியில் டெபாசிட் வாங்க மாட்டார் இ.பி.எஸ் - ஸ்டாலின்!

அந்த நேரத்தில் இந்தியாவில் பிரபலமான மீடூ இயக்கத்தின் ஆதரவின் பேரில், இந்த வழக்கு நீதிமன்றத்தை அடைந்தது. 

கொரோனா தொற்றுநோய் இந்த வழக்கில் தற்போதுள்ள சிக்கல்களை மேலும் அதிகரித்துள்ளது என பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார். 

இந்த வழக்கில் இவருக்கு உதவும் ஆர்வலர்களின் கூற்றுப்படி, பல ஆண்டுகளாக நிறுவனத்துடன் இருந்த ஊழியரை – ஐ.சி நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது ஊதிய விடுப்பில் டி.சி.எஸ் நிறுவனம் அனுப்பவில்லை என்றும்  மேலும் அவரது தாயார் சில வாரங்களுக்கு முன்பு கொரோனா அறிகுறிகளை அனுபவித்தபோது, அவர் விடுப்பு பெற முயன்றார். 

அப்பொழுது அவர் சம்பாதித்த விடுப்புக்கான ஆதாரத்தை சமர்ப்பிப்பது உட்பட பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாகவும் அவர்கள்  கூறினார். 

Also Read  தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?

“இந்த நடத்தை கண்டு நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். பாலியல் துன்புறுத்தல் தடுப்பு (போஷ்) சட்டம் பாதிக்கப்பட்டவருக்கு தற்போதுள்ள விடுப்புக்கு கூடுதலாக மூன்று மாத ஊதிய விடுப்பை வழங்குகிறது, ”என்று அவரது வழக்கை ஆதரிக்கும் தொழில்நுட்ப தொழிற்சங்கவாதிகள் தெரிவித்தனர். 

எனேவே இவ்வழக்கை விரைவில் விசாரித்து நீதிவழங்க நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யவேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவருக்கு இவ்வழக்கை மேற்கொள்ள ஆன செலவுகளை நீதிமன்றம் மூலம் வழங்கவேண்டும் என்றும் எப்ஐடிஇ இன் பொதுச்செயலாளர் ஏ.ஜே வினோத் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டார். 

Also Read  நடிகர் செந்தில் போலி டுவிட்டர் கணக்கு - விஷமிகளை வலை வீசி தேடும் போலீசார்…!

மேலும் இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் நவம்பர் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் 16.10.20

Tamil Mint

படப்பிடிப்பின் போது வலது கையில் காயம்: அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அருண் விஜய்.!

mani maran

தமிழகத்தில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு : முழு வழிகாட்டு நெறிமுறைகள் இதோ

suma lekha

தமிழக அரசின் இலவச தையல் மிஷின் பெற என்ன செய்ய வேண்டும்?

Lekha Shree

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா…!

Lekha Shree

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுகிறதா? – அண்ணாமலை விளக்கம்

Lekha Shree

கடலூர் மாவட்டத்தில் மட்டும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 4 பேர் பலி

sathya suganthi

43 ஆண்டு கால வரலாற்றில் ஒருமுறைகூட எடப்பாடி தொகுதியில் தி.மு.க வெற்றிபெற்றதில்லை: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

தமிழகத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்

Tamil Mint

கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா காலமானார்

sathya suganthi

நடிகர் விவேக், கி.ராவுக்கு சட்டமன்றத்தில் புகழாரம்…!

sathya suganthi