தடுப்பூசி செலுத்திக் கொள்ள வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கும் அரசு பள்ளி ஆசிரியர்..!


ராணிப்பேட்டை மாவட்டம் அரங்காபுரம் பகுதியில் தடுப்பூசி முகாமில் கலந்துகொள்ள வேண்டும் என மக்களை சந்தித்து அவர்களுக்கு வெற்றிலை பாக்குடன் அழைப்பிதழ் வைத்து அழைத்து வருகிறார் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவந்த நிலையில், அதன் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது. கொரோனாவிலிருந்து பெரிதாக நம்மைக் காக்கும் கருவி யாக தடுப்பூசி கருதப்படுகிறது. தமிழ்நாடு அரசும் மாவட்டங்கள் வாரியாக தடுப்பூசி முகாம்களை நடத்திவருகிறது. சில சமயங்களில் கொரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடுகளும் ஏற்படுகிறது. அப்போதெல்லாம், கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைப்பது அல்லது தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையைக் குறைப்பதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

Also Read  ஏம்மா இதுக்கெல்லாமா தற்கொலை செய்வீங்க.... பட்டதாரி பெண் தவறான முடிவு...

அரசு ஒருபுறம் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்திவந்தாலும், தன்னார்வ அமைப்புகளும் ஆங்காங்கே தடுப்பூசி முகாம்களை நடத்திவருகின்றனர். அந்தவகையில் இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அரங்காபுரம் பள்ளியில் நாளை (03.07.2021) கொரோனா தடுப்பூசி முகாமை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பாணாவரம், எய்ட் இந்தியா மற்றும் அரங்காபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இந்தத் தடுப்பூசி முகாம் அரங்காபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறும் என்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆதார் கார்டுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் நபர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தத் தடுப்பூசி முகாமில் அப்பகுதி மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என அரங்காபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கரன், எய்டு இந்தியா தொண்டர்கள் ஆகியோர் மக்களை சந்தித்து அவர்களுக்கு வெற்றிலை பாக்குடன் அழைப்பிதழ் வைத்து அழைத்துவருகின்றனர்.

Also Read  சாதியால் வஞ்சிக்கப்பட்ட ரோஜா சாதித்த கதை..!

தடுப்பூசி முகாம் நடத்துவது மட்டுமின்றி, அதற்கு மக்களைத் தங்கள் வீட்டு சுபகாரியத்திற்கு அழைப்பதுபோல் அழைத்துவருவது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விவசாயிகளின் நகை கடன், மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

Lekha Shree

அமெரிக்க துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிஸ் மற்றும் அதிபர் ஜோ பிடென் நாட்டு மக்களுக்கு உரை

Tamil Mint

இப்படியும் ஒரு நண்பனா…? புகைப்படங்கள் வைத்து மிரட்டல்…. போலீஸ் கைது…

VIGNESH PERUMAL

இதையெல்லாம் ஏன் செய்கிறார்கள் என்றே தெரியவில்லை… பிரபல நடிகையின் மனக்குமுறல்…!

Tamil Mint

இ பதிவு இணையதளத்தில் மாற்றம்.. திருமணத்திற்கான அனுமதி நீக்கம்..

Ramya Tamil

தமிழக அரசின் தலைமை கொறடாவாக கோவி. செழியன் நியமனம்..

Ramya Tamil

காடன்’ படத்தின் புதிய பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

VIGNESH PERUMAL

வினோத திருட்டு…. மக்களே உஷார்….. காரில் உலாவரும் நாய்கள்… கண்ணிமைக்கும் நொடி பொழுதில் மாயம்…

VIGNESH PERUMAL

ஏன் தாமதமாக வந்தாய் என கேட்ட தாயை கொலை செய்த மகன்! – அதிர்ச்சி சம்பவம்

Tamil Mint

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுபாடு! – தெலங்கானாவில் இருந்து எடுத்து வந்து உதவிய தமிழிசை!

Shanmugapriya

அர்ஜுன மூர்த்தி விவகாரம்: தயாநிதி மாறன் மறுப்பு

Tamil Mint

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பட காதல் தம்பதிக்கு சர்ப்ரைஸ்… தயாரிப்பாளர் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்…!

malar