தந்தை பாசத்தால் உத்திரப்பிரதேச முதல்வரை நெகிழ வைத்த சிறுமி


பட்டாசு விற்றதால் கைது செய்யப்பட்ட தன தந்தையை விடுவிக்குமாறு, வாகனத்தில் தலையை முட்டிக்கொண்டு போலீசாரிடம் கெஞ்சிய சிறுமியை குறித்து அறிந்த உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சிறுமியின் தந்தையை விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக டெல்லி, கர்நாடகா, ஒடிசா, ராஜஸ்தான் போன்ற காற்றின் தரம் மோசமாக இருக்கும் பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது. 

Also Read  2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது! - எங்கு தெரியுமா?

இத்தடையை மீறி பட்டாசு விற்ற நபரை உபி போலீசார் கைது செய்தனர். இதைப் பார்த்த கைது செய்யப்பட்டவரின் பெண் குழந்தை வாகனத்தின் முன் நின்று தந்தையை விடுவிக்குமாறு போலீசாரிடம் கெஞ்சியுள்ளது. இதற்கு போலீசார் மறுக்கவே வாகனத்தில் தன் தலையை முட்டிக்கொண்டு அக்குழந்தை அழுதுள்ளது.  அக்காட்சி  இணையதளங்களில் வெளியானது.

அக்காணொளி சமூக வலைதளங்களில் பரவவே, யோகி ஆதித்யநாத் கவனத்துக்கும் அது சென்றுள்ளது.

Also Read  மகளிர் தினத்தன்று பெண்கள் செல்போன் வாங்கினால் 10% தள்ளுபடி! - ஆந்திர அரசு அதிரடி

இதையடுத்து உடனடியாக குழந்தையின் தந்தையை விடுவிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார் யோகி ஆதித்யநாத். இதனையடுத்து, போலீஸார் குழந்தையின் தந்தையை விடுவித்து வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அதோடு குழந்தைக்குப் பரிசுப் பொருட்களும், இனிப்புகளும் வாங்கி கொடுத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Also Read  குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி திடீரென ராஜினாமா…!

இந்த சம்பவத்தை புலந்த்சார் குர்ஜா காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் குமா சிங் உறுதி செய்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாடு முழுவதும் மாசு அதிகமாக உள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை: பசுமை தீர்ப்பாயம் அதிரடி அறிவிப்பு

Tamil Mint

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கெளரி அம்மா 101 வயதில் காலமானார்

sathya suganthi

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Tamil Mint

மாமன் மகன்களோடு செல்போனில் பேசியதால் அடி உதை! ஊரே பார்க்க கொடுமைப் படுத்திய அதிர்ச்சி வீடியோ!

sathya suganthi

ஆதாரால் குடும்பத்துடன் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர்! வைரல் சம்பவம்..!

Lekha Shree

தில்லி, குஜராத்தில் கொரோனா நிலவரம் எல்லை மீறி செல்கிறது: உச்ச நீதிமன்றம்

Tamil Mint

வாட்ஸ்அப் மூலம் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

suma lekha

கிழக்கு லடாக்கில் என்ன நடக்கிறது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

Tamil Mint

காவலர் கொடுத்த சிபிஆர் சிகிச்சை – உயிர் பிழைத்த இளைஞர்!

Lekha Shree

டெல்லியில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வெப்பம் பதிவு! – முழு விவரம்

Shanmugapriya

“நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவது தற்கொலை எண்ணங்களை தூண்டும்” – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Shanmugapriya

1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்..! ஆளுநர் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!

Devaraj