தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை


தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்பிலிருந்து சற்றே மக்கள் மீண்டுள்ள நிலையில் மேலும் ஒரு புயல் உருவாகியிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. 

வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது புயலாக எப்பொழுது வேண்டுமென்றாலும் மாறலாம் என கூறப்படுகிறது. 

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பொழுது அதற்கு புரெவி என பெயர்சூட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதைத்தொடர்ந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டு உள்ளது. 

Also Read  மின் கட்டணத்தை மக்களே கணக்கீடு செய்யலாம் - மின்வாரியம்

டிசம்பர் 1 முதல் 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

           நாள் (01.12.2020): தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Also Read  சாமானியரை பாதிக்கும் மாற்றங்கள்… இன்று முதல் புதிய விதிகள் அமல்..!

           நாள்  (02.12.2020): தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது;  தமிழ்நாட்டின் தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும், மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், காரைக்கால், செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..

           நாள்  (03.12.2020): தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழக அரசு தெரிவித்துஉள்ளது. 

Also Read  முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன்பு ஒருவர் தீக்குளிப்பு… ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு..!

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புதிய கல்விக் கொள்கை என்பது காவிக் கொள்கை – மு.க. ஸ்டாலின்

Tamil Mint

காயத்ரி ரகுராமுக்கு நீதிமன்றம் சம்மன்…!

sathya suganthi

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Tamil Mint

ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு!

Lekha Shree

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Lekha Shree

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் களத்தில் இறங்கிப் பிரசாரம் செய்வார்: பிரேமலதா விஜயகாந்த்

Tamil Mint

திண்டுக்கல் ஐ.லியோனி பதவியேற்பு விழா திடீரென ரத்து…!

Lekha Shree

தமிழகத்தில் 3000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

விஜய் விஷ வளையத்தில் சிக்கியுள்ளார், என்னை ஜெயிலுக்கு அனுப்பினாலும் பரவாயில்லை: எஸ் ஏ சி

Tamil Mint

சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

Tamil Mint

தாயாரின் உடலுக்கு முதல்வர் கண்ணீர் அஞ்சலி

Tamil Mint

யூடியூப்பில் ஆபாசமாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த “பப்ஜி” மதன் கைது

sathya suganthi