தமிழகம்: கடலோர மாவட்டங்களின் நிலவரம்


கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலோராப் பகுதிகளில் இன்றில் இருந்தே பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடலோர மாவட்டங்களில் இன்று 50-60 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் காற்றின் வேகம் 90 கி.மீ அளவிற்கு கூட செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also Read  காவல்துறையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை.....மகன் புகார்....

25ம் தேதி காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே ‘நிவர்’ புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல், டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் படிப்படியாக மழை அதிகரிக்க உள்ளதாகவும் 25 மற்றும் 26ம் தேதிகளில் சென்னையில் உச்சகட்ட மழை இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற 2 நாட்கள் சிறப்பு முகாம்

சென்னையில், அதிகபட்சமாக 10 செ.மீ வரை மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Also Read  வீடு வாடகைக்கு பிடித்து தருவதாக கூறி சென்னையில் 100 பேரிடம் ரூ.2 கோடி மோசடி

விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் புதன்கிழமை கன மழை பெய்யும் என்றும் வங்கக் கடலில் புயல் காற்று 18 கி.மீ வேகத்தில் வட மேற்காக நகர்ந்து வரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் 7000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

வங்கி ஏடிஎம்களில் நூதன கொள்ளை – முக்கிய குற்றவாளிகள் கைது

sathya suganthi

சசிகலா விடுதலை சலுகை நிவாரணத்திற்கு விண்ணப்பம்.

Tamil Mint

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை மருத்துவமனையில் இருந்தே விடுதலை!

Tamil Mint

தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி – விபி துரைசாமி

Tamil Mint

மின்வெட்டும் திமுகவும்…! திருவிளையாடல் பட பாணியில் கலாய்த்த நத்தம் விஸ்வநாதன்!

sathya suganthi

திமுகவின் ஐபேக் டீமுக்கு போட்டியாக அதிமுகவில் களமிறங்கிய SMS டீம்!

Tamil Mint

“தமிழ்நாட்டில் மொட்டை தான் இலவசமாக கிடைக்கிறது” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்..!

Lekha Shree

ஒரே மாதத்தில் 10 காட்டெருமைகள் உயிரிழப்பு: கொடைக்கானலில் அதிர்ச்சி.

mani maran

முதல்வருக்கு வந்த கொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

கடலூர் மாவட்டத்தில் மட்டும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 4 பேர் பலி

sathya suganthi

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு!

Tamil Mint