தமிழகம்: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைவு


கொரோனா இனி மெல்ல சாகும்! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை காண முடிகிறது. 

இன்று 1,411 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்மேலும்  இதுவரை 7.60 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,83,319 ஆக அதிகரித்து உள்ளது. 

இன்று மட்டும் 65,058 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 21 லட்சத்து 25 ஆயிரத்து 059 மாதிரிகள் சோதனையிடப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  “கர்ணன்” திரைப்படம் குறித்து ஜோதிமணி எம்.பி. என்ன சொன்னார் தெரியுமா?

இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில், 4,73,298 பேர் ஆண்கள், 3,09,987 பேர் பெண்கள் மற்றும் 34 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.  

இன்று மட்டும் 1,411 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 60 ஆயிரத்து 617 ஆக உள்ளது.

Also Read  விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : பிரதமர் மோடி

இன்று, கொரோனாவிற்கு இரையானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உள்ளது. அதில், 6 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 4 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். 

இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 11,722 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,980 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். 

Also Read  இழுத்தடிக்கும் இடப் பிரச்சினை.... அத்துமீறியது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகமா? அடம் பிடிக்கும் இசைஞானியா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அண்ணா பல்கலை., முன் திமுக இளைஞரணி நாளை ஆர்ப்பாட்டம்

Tamil Mint

அவைத்தலைவராக சசியை பரிந்துரைக்கும் பாஜக…ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க நினைக்கும் இபிஎஸ்!

suma lekha

நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள், ஸ்டாலின் கவலை

Tamil Mint

தி.மு.க., வுடன் கூட்டணி இல்லை: கமல்ஹாசன் திட்டவட்டம்

Tamil Mint

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறை…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!

sathya suganthi

சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை: ஆணை வழங்கப்பட்டது

Tamil Mint

PSBBக்கு எதிராக மாடல் அழகி புகார் கூறுவதா? – வெகுண்டெழுந்த காயத்ரி ரகுராம்…!

sathya suganthi

தேர்தலில் அதிக தொகுதிகள் வேண்டும்: திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் காங்கிரஸ்

Tamil Mint

மதுரையில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட கோவில் திறப்பு!

Tamil Mint

ஈபிஎஸ்-ஓபிஎஸ் திடீர் சந்திப்பு! – காரணம் இதுதான்?

Lekha Shree

தமிழக சட்டமன்றத் தேர்தல் : கட்சிகள் பெற்ற வாக்கு விகிதம்…!

sathya suganthi

கலக்கும் வில்லேஜ் குக்கிங் சேனல்! டைமண் பட்டன், 10 லட்சம் கொரோனா நிவாரண நிதி…!

sathya suganthi