தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உதவி: பிரதமர் மோடி உறுதி


‛நிவர் ‘ புயலால் ஏற்படவிருக்கும் பாதிப்பு தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர்களுடன் இன்று பேசிய பிரதமர் மோடி, இவ்விரு மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு நிச்சயம் செய்யும் என உறுதி அளித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள, ‛நிவர்’ புயல், மாமல்லபுரத்துக்கும், புதுச்சேரிக்கும் இடையே நாளை கரையை கடக்க உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்தது.

Also Read  ஊரடங்கு உத்தரவை மீறி இறுதி ஊர்வலத்துக்கு திரண்ட மக்கள்… யாருக்காக தெரியுமா?

இதனையடுத்து, இந்த புயலை எதிர்கொள்ள, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. 

ஒருவாரத்திற்கு தேவையான உணவு பொருட்கள், மருந்து மாத்திரைகளை கைவசம் வைத்து கொள்ள மக்களுக்கு அறிவுரை வழங்கியது. 

மேலும் டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏழு மாவட்டங்களுக்கு இன்று மதியம் முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளது.

புயல் தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பக்கத்தில் ” ‛நிவர்’ புயல் தொடர்பான சூழ்நிலை குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் தொலைபேசியில் பேசினேன். தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என உறுதியளித்தேன். பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலனுக்காக வேண்டி கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.  

Also Read  இ-பாஸ் பெற புரோக்கர்களை நம்பி நம்பி ஏமாறவேண்டாம்: சென்னை கமிஷனர் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“இந்தியாவில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்” – பிரகாஷ் ஜவடேகர்

Lekha Shree

“ஒரு வருடமாக உடல் உறவில் ஈடுபடவில்லை” – கணவன் மீது எப்ஐஆர் பதிந்த மனைவி!

Shanmugapriya

சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சரவணா ஸ்டோர்ஸ் ?

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 16.5.2021

sathya suganthi

“தமிழகத்தில் காவல்துறை பெண் அதிகாரிக்கே பாதுகாப்பில்லை” – கனிமொழி எம்.பி

Lekha Shree

திருட முயன்று ஏடிஎம் இயந்திரத்திற்குள் சிக்கிய திருடன்… நாமக்கல்லில் நிகழ்ந்த வேடிக்கை சம்பவம்..!

Lekha Shree

இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வரும் 2021 பிப்ரவரி மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது!!

Tamil Mint

தமிழகம்: மேலும் 1,114 பேர் கொரோனாவால் பாதிப்பு

Tamil Mint

கேரளாவில் அதிரடி காட்டும் கோவிட்-19!

Tamil Mint

பெண்களும் அர்ச்சகராகலாம்…! – அமைச்சர் சேகர் பாபு!

Lekha Shree

சென்னை Vs கோவை: யார் முட்டாள் என ட்விட்டரில் மோதல்!

Lekha Shree

“உங்கள் பெருந்தன்மையை குறைக்கிறது” – செல்லூர் ராஜு குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்..!

Lekha Shree