தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த விவகாரத்தில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


தமிழ்நாடு வக்பு வாரியத்தில் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை ஒட்டி, கடந்த 2017ம் ஆண்டு தேர்தல் மூலம் 6 பேரும், நியமனம் மூலம் 4 பேரும் உறுப்பினரானார்கள். 

 

பார் கவுன்சில் உறுப்பினர்கள் இல்லாததால், இரு மூத்த  வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். 

 

நியமன உறுப்பினர்களை விட தேர்வான உறுப்பினர்கள் அதிகம் இருக்க வேண்டும் என்ற விதிப்படி இல்லாததால், வாரியத்தை கலைத்து 2019ம் ஆண்டு செப். 18ம் தேதி தமிழக அரசு  உத்தரவிட்டது. 

 

Also Read  தபால் வாக்குகள்…! அதிக தொகுதிகளில் திமுக முன்னிலை…!

மேலும், நிதித்துறை செலவின செயலர் சித்திக் என்பவரை வாரியத்தின் சிறப்பு அதிகாரியாகவும் நியமித்தது.

 

வக்பு வாரியம் கலைக்கப்பட்ட அரசாணையையும்,  முத்தவல்லிகள் பட்டியலை கேட்கும் கடித போக்குவரத்துகளையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராயப்பேட்டையை சேர்ந்த எஸ்.சையது அலி அக்பர் என்ற வக்பு வாரிய உறுப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தார். 

 

Also Read  குழந்தைகள் கடத்தல் வழக்குகளை முறையாக விசாரிக்காத தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

இதில்,  தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.

 

 

இதுதொடர்பாக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. 

 

இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூசன் அமர்வு, ‘சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது. தமிழக  அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. 

Also Read  "யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார்?" - கே.டி.ராகவன் வீடியோ விவகாரம் குறித்து சீமான் பரபரப்பு கருத்து..!

 

வக்பு வாரியம் இருக்கும் வரை நியமனம் செய்யப்பட்ட இரு மூத்த வழக்கறிஞர்கள் செயல்பட எவ்வித தடையும் இல்லை’என்று உத்தரவிட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நதி நீர் பங்கீடு: தமிழகம், கேரளா முக்கிய ஆலோசனை

Tamil Mint

திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் கருணாஸ்… இணைந்து கொண்ட தமிமுன் அன்சாரி!

Lekha Shree

ரேஷன் கடைகள் செயல்பட அனுமதி – தமிழக அரசு

Lekha Shree

5 சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் நபர்…! காரணம் இதுதான்..!

Lekha Shree

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்

Tamil Mint

மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனை…? தலைமைச் செயலகத்தில் நடந்த டீலிங்…!

sathya suganthi

திமுகவில் இணைந்த நடிகர் விமலின் மனைவி…. தேர்தலில் போட்டியிட விருப்பமனு… எந்த தொகுதி தெரியுமா?

Lekha Shree

நாளை முதல் தமிழகத்தில் சுங்கக் கட்டணங்கள் உயர்வு, மக்கள் அதிர்ச்சி

Tamil Mint

தமிழக பதிவுத்துறையில் பெரும்பாலான வேலைகள் மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகிறது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

Tamil Mint

திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள்: அறிவாலயத்தில் அவசர ஆலோசனை

Tamil Mint

தமிழகம்: தசம மதிப்பில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…!

Lekha Shree

தமிழகத்தில் புதிதாக 1,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

suma lekha