தயாரிப்பாளர் சங்க தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது


இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் 1303 பேர் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர். 

சங்கத்திலுள்ள 27 பொறுப்புகளுக்கு மொத்தம் 112 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ராமசாமி முரளி, T.ராஜேந்தர், P.L.தேனப்பன் ஆகிய மூவரும் முதல் முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

சிவசக்தி பாண்டியன், R.K.சுரேஷ், P.T.செல்வகுமார், அடிதடி முருகன் இவர்களை காட்டிலும் சுயேச்சையாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிங்காரவடிவேலன் மற்றும்  கதிரேசன் இருவரும் கடும் போட்டியாளர்களாக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

Also Read  ட்ரெண்டாகும் 'தல 61' ஹேஷ்டேக்…! ஏன் தெரியுமா?

கௌரவ செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், மன்னன், கே.ஜே.ஆர், சுபாஷ் சந்திரபோஸ் இடையில் கணிக்க முடியாத போட்டி நிலவி வருகிறது.

பொருளாளர்  பதவிக்கு அணியின் சார்பில் போட்டியிடும் கே.ராஜன்-சந்திரபிரகாஷ் ஜெயின் இருவருக்குமான போட்டி, சந்திரபிரகாஷ் ஜெயின்-சுயேச்சையாக போட்டியிடும் ஜே.எஸ்.கே  சதிஷ்க்குமான போட்டியாக மாறியுள்ளது.

நலம் காக்கும் அணி சார்பில் நேற்றைய தினம் வாக்களர்களுக்கு வழங்கப்பட இருந்த அன்பளிப்பை வழங்கவிடாமல், எதிர் அணி காவல்துறையில் புகார் செய்து தடுத்ததால் அவர்களுக்கான ஆதரவு வாக்கு நலம் காக்கும் அணிக்கு ஆதரவாக மாறியுள்ளது.

ஒட்டுமொத்தமாக ஒரே அணி வெற்றியை அறுவடை செய்வது சாத்தியமில்லை. சுயேச்சைகள் ஆதிக்கம் துணை தலைவர் பதவியில் இருப்பதற்கு காரணம்”கரன்சி மழை” வளமாக சென்றதே என்கின்றனர்.

Also Read  ஜீ டிவிக்கு சென்ற 'குக் வித் கோமாளி' அஸ்வின் ! முழு விவரம் இதோ..!

அரசியல் கட்சிகள் தேர்தலில் அதிகபட்சமாக ஒரு வாக்குக்கு 2000ம் ரூபாய் வரை இந்தியாவில் வழங்கியுள்ளது. ஆனால் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் ஒரு வாக்காளருக்கு 20,000 ம் ரூபாய் வரை கிடைத்துள்ளது. 60% வாக்காளர்கள் மட்டுமே அன்பளிப்பு, கரன்சிகளை வேண்டாம் என கூறியுள்ளனர்.

இன்று நடைபெற்றுவரும் தேர்தலுக்காக வேட்பாளர்கள் தரப்பில் சுமார் 3 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது என தகவல் கசிந்துள்ளது.

Also Read  நடிகர் சூரி மலையாளி வேடத்தில் நடிக்கும் வேலன் படத்தின் டப்பிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

இன்று மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை (23.11.2020) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் அதிகாரியால் அறிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

’விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதி ஜோடிகள்… இன்ஸ்டாகிராமில் உறுதி செய்த 3 சின்னத்திரை நடிகைகள்..!

suma lekha

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு 2வது குழந்தை பிறந்தாச்சு… என்ன குழந்தை தெரியுமா?

malar

‘வடசென்னை’ ராஜனாக கென் கருணாஸ்? வெளியான ‘மெர்சல்’ அப்டேட்..!

Lekha Shree

தவறான பேஷியல் – ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்ட நடிகை ரைசா!

Lekha Shree

தியேட்டர்களில் வெளியாகும் சாய் பல்லவியின் திரைப்படம்…! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!

Lekha Shree

அருண் விஜய் – இயக்குனர் ஹரி மாஸ் கூட்டணி! AV33 படத்தின் சூப்பர் அப்டேட்…!

Lekha Shree

சூர்யா 40-ல் இணைந்த ‘அண்ணாத்த’ நட்சத்திரம்! யார் தெரியுமா?

Tamil Mint

தமன்னாவின் முதல் தமிழ் வெப்சீரிஸ் இன்று ரிலீஸ்…!

Lekha Shree

பிரகாஷ் ராஜ் கதாபாத்திரத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி… எந்த படத்தில் தெரியுமா?

Lekha Shree

ரஜினிக்காக எஸ்.பி.பி பாடிய கடைசி பாடலின் வெளியீடு எப்போது? வெளியான ‘மரண மாஸ்’ அப்டேட்..!

Lekha Shree

சந்தன கடத்தல் வீரப்பனின் வாரிசா இவர்…. தமிழ் சினிமாவின் புதிய நடிகை….

VIGNESH PERUMAL

“நான் படம் தயாரிக்க போகிறேன். நடிக்க விருப்பம் இருந்தால் வாங்க” – வடிவேலுவுக்கு மீரா மிதுன் அழைப்பு!

Shanmugapriya