தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை: பூங்கோதை பரபரப்பு அறிக்கை


தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் டாக்டர். பூங்கோதை ஆலடி அருணா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

“19.11.2020 காலை ஆலங்குளத்தில் காலை 6 மணியளவில்  உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்து – என்னுடைய பணியாளர்கள் உடனடியாக சீபா மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். இரத்த பரிசோதனையில் என் உடலில் இரத்தம் உறையும் தன்மை குறைவாகவும், சர்க்கரை அளவு குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டு – மூளை, நெஞ்சு சி.டி ஸ்கான் எடுக்கப்பட்டு தக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

Also Read  நாங்கள் ஜோசியம் பார்க்கவில்லை: ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி

நடந்த இந்த உண்மைச் சம்பவத்தை  மறைத்து தவறாக திரித்து நான் ஏதோ தற்கொலை முயற்சி செய்துகொண்டது போல் ஊடகங்கள் பொய்யுரை பரப்புவது மிகுந்த  வேதனை அளிக்கிறது.

15 ஆண்டுகள் அரசியலில்  – முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்கள் என்னை அமைச்சராக நியமித்து அழகு பார்த்தார். 

அப்போது எவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் என்னை தன் மகளைப் போல் பாசத்துடன் நடத்தினாரோ, அதேபோல கழகத் தலைவர் அண்ணனும் என் மீது பாசமாக இருக்கிறார். எனக்குச் சட்டமன்ற உறுப்பினராக, மாநில மருத்துவ அணி தலைவராக பணியாற்ற வாய்ப்பளித்து என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். 

இத்தகைய சூழலில் கழகத்திற்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன்.

Also Read  *காதல் திருமணம் குறித்து அதிமுக எம்எல்ஏ பிரபு விளக்கம்

தற்போது  நான் சென்னை அப்போலோ மருத்துவமனையில் எனக்கு ஏற்பட்ட திடீர் மயக்கத்திற்கான  மருத்துவ காரணங்களை அறிய அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.

எனக்கு மட்டுமல்ல, என் தந்தைக்கும் எனக்கும் முகவரியும் முன்னேற்றமும் தந்தது இந்த மாபெரும் ஜனநாயக இயக்கமான தி.மு.க.

Also Read  விழுப்புரத்தில் இளைஞர் தவறவிட்ட பணத்தை ஒப்படைத்தவருக்குப் பாராட்டு.

ஆகவே எனக்கு மருத்துவ ரீதியாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு குறித்து  தயவுகூர்ந்து இத்தகைய தவறான வதந்திகளைப் பரப்பி என்னை வளர்த்துள்ள கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்திட வேண்டாம் என்றும் என் உடல்நிலை குறித்து விசாரிக்காமல் பத்திரிகைகள் ஊடகங்கள் கற்பனைச் செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் பணிவுடன் கேட்டு கொள்கின்றேன்”. இவ்வாறாக அந்த அறிக்கையில் கூறபட்டது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆ.ராசா, தயாநிதி மாறன், லியோனி மீது வழக்குப்பதிவு..!

Lekha Shree

தலைமை செயலக வடிவில் கேக்.. திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக ஆதரவாளர்..

Ramya Tamil

இனி அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டாக் கட்டாயம்: முழு தகவல்கள்

Tamil Mint

“புதுசா எவன் மா கதை சொல்றான்”: வெளியானது ‘Annabelle Sethupathi’ படத்தின் ட்ரைலர்.

mani maran

காந்தியைப் போல் நேதாஜி படமும் ரூபாய் நோட்டில் வருமா?

Tamil Mint

ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

உதயநிதியின் ‘கொங்கு’ பிராஜக்ட்! வானதியை டீல் செய்ய கனிமொழியை இறக்கும் திமுக!

Lekha Shree

தமிழகம்: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை

Tamil Mint

டாஸ்மாக் கடைகள் திறப்பு – பாஜக போராட்டம்

sathya suganthi

இழுத்தடிக்கும் இடப் பிரச்சினை…. அத்துமீறியது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகமா? அடம் பிடிக்கும் இசைஞானியா?

Tamil Mint

அமலுக்கு வந்தது அபராதம்: துப்பினால், முக கவசம் அணியாவிட்டால் ஃபைன் கட்ட தயாராகுங்கள்

Tamil Mint

வேல் யாதிரைக்கு அனுமதி கிடையாது – தமிழக அரசு உத்தரவு

Tamil Mint