திமுகவில் புதிய அணி துவக்கம்


திமுகவில் ‘சுற்றுச்சூழல் அணி’ என்ற புதிய அணி இன்று தொடங்கப்பட்டது.  அதன் மாநிலச் செயலாளராக கார்த்திகேய சேனாபதியை நியமனம் செய்துள்ளது திமுக. 

இவர், கொங்கு நாட்டின் தலைதாழாச் சிங்கம், தன்மான முரசு, தமிழ் இனத்துச் சுடரொளி என்றெல்லாம் பாராட்டப்பட்ட மறைந்த குட்டப்பாளையம் சாமிநாதன் அவர்களின் பேரன். 

கார்த்திகேய சேனாபதி கால்நடைப் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறார். மேலும் இவர் கல்லூரி மாணவர்களிடையே மழைநீர் சேமிப்பு குறித்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். 

ஐக்கிய நாடுகளின் உணவு வேளாண்மை அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ரியோ உச்சி மாநாட்டில் நிலையான வளர்ச்சித் திட்டம் ஆகிய பல்வேறு சர்வதேச மாநாடுகளில் பங்கேற்றுச் சொற்பொழிவாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் கார்த்திகேய சேனாதிபதி. 

Also Read  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் - இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்..!

எனவேதான் கழகத்தின் இந்த சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் பதவி இவருக்கு அளித்திருப்பதாக கழகத்தில் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த அணி திமுக சட்டதிட்ட விதி 31 ன்படி உருவாக்கப்பட்டு பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர். 

Also Read  தமிழ்நாடு: 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

திமுக வின் பொதுக்கூட்டங்களில், மத்திய – மாநில அரசுகளின் சுற்றுச்சூழலுக்கு எதிரான, ஒருதலைப்பட்சமான, எதிர்காலம் குறித்த எண்ணம் சிறிதுமில்லாத நடவடிக்கைகள், மனித குலத்திற்கே சவால் விடுவதாகவும் – வேளாண் நிலங்களைப் பறிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. 

அதை தொடர்ந்து  காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், தூத்துக்குடி பகுதியில் ஸ்டர்லைட் ஆலை, சேலம் – சென்னை எட்டுவழிச் சாலை, தமிழ்நாடு முழுவதும் எண்ணெய்க் கிணறுகள் போன்ற திட்டங்களுக்கு எதிராகப்  போராடுவதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தில் ‘சுற்றுச்சுழல் அணி உருவாக்கப்பட்டது எனத் தெரிவித்தனர்.

Also Read  புதிய கல்விக் கொள்கை என்பது காவிக் கொள்கை - மு.க. ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விபத்தில் சிக்கிய எம்.எல்.ஏ.வானதி சீனிவாசனின் மகன்…! வேகமாக கார் ஓட்டியதால் விபரீதம்..!

Lekha Shree

டி.சி.எஸ் ஊழியருக்கு எதிரான மீடூ வழக்கை விரைவாக கண்காணிக்க ஆர்வலர்கள் முதல்வருக்கு கோரிக்கை

Tamil Mint

அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை

Tamil Mint

சசிகலா இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்… பிப்ரவரியில் தமிழகம் திரும்ப வாய்ப்பு!

Tamil Mint

கனிமொழி Vs இந்தி மொழி: சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்

Tamil Mint

ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லம் வழக்கு: தீபா, தீபக்குக்கு கோர்ட் நோட்டீஸ்

Tamil Mint

நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்.!

suma lekha

கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு!

Lekha Shree

அதெல்லாம் பண்ண முடியாது: தில்லியிடம் கறார் காட்டும் எடப்பாடி

Tamil Mint

ஆளுங்கட்சி அமைச்சர்கள் மீது ஊழல் புகார்: நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் மனு!

Tamil Mint

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு ஜாமின்! – ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!

Lekha Shree