“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனிதநேயமற்றவர்”: கே.பி.ராமலிங்கம்


இன்று அமித்ஷா முன்னிலையில்  தாமரையில் சங்கமம் ஆகிறார் திமுக முன்னாள் MP திரு கே.பி.இராமலிங்கம்.

கே.பி.இராமலிங்கம் அளித்த பேட்டியில், திமுக தலைவர் மு.க ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். 

 

“என்னால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கொள்கை ரீதியாக, அரசியல் ரீதியாக தலைவருக்கான பக்குவம் ஸ்டாலினுக்கு இல்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனிதநேயமற்றவர். அரசியலுக்காகவும், தன்னை முன்னிறுத்துவதற்காகவும் மட்டுமே அவர் செயல்பட்டு வருகிறார்” என்று கே.பி.இராமலிங்கம் குற்றம் சாட்டினார்.

திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும்  கடந்த ஏப்ரல் மாதம் இவர் நீக்கப்பட்டார். 

Also Read  ராஜ் பவனை சுழற்றி அடிக்கும் கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட தமிழக ஆளுநர்

திமுக மாநிலங்களவை உறுப்பினராக இவர்  இருந்த பொழுது, அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் கட்சியை கைபற்றுவதில் மோதல் போக்கு நிலவியது. அப்போது இவர் அழகிரியின் ஆதரவாளராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து கட்சித் கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் கே.பி.ராமலிங்கத்துக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவர் அதிரடியாக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 

Also Read  எஸ்பிபி நலம் பெற பிரார்த்தனை செய்த ரஜினிகாந்த்: வீடியோ வெளியீடு

அக்கட்சியிலிருந்து விலகியப்பின் அவர் அளித்த பெட்டியில் “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அறிவாற்றல் மிக்கவர்கள் சொல்வதை கேட்டு நடக்கும் மனப்பான்மை பழனிசாமிக்கு உள்ளது” என்று புகழாரம் சூட்டினார். 

இதனையடுத்து அவர்  அதிமுகவில் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர் தற்போது பாஜகவில் இணையவுள்ளார்.

Also Read  10 எண்றத்துக்குள்ள.. ஈபிஎஸ் கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்...

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முன்னாள் அதிமுக அமைச்சர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு.!

suma lekha

சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் ஸ்டாலின் இன்று சந்திப்பு…!

sathya suganthi

பாஜக வேட்பாளர் பட்டியல் இதோ…!

Devaraj

குரூப் 1 தேர்வு – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி

Tamil Mint

யார் இந்த ஸ்டேன் சாமி? இவர் கைதாக என்ன காரணம்? நாடு முழுவதும் இவர் இறப்பை பற்றி பேசுவது ஏன்?

Lekha Shree

ஆன்லைன் கேம் ‘Free Fire’க்கு தடை விதிக்கப்படுமா?

Lekha Shree

செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி வரிஏய்ப்பு: வருமான வரித்துறை

Tamil Mint

அரசியல் சண்டைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது ஏன்? – தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி

Tamil Mint

“ஊழலின் சரணாலயமாக தமிழகத்தை மாற்றியுள்ளார் எடப்பாடி” – மு.க.ஸ்டாலின்

Shanmugapriya

சசிகலா வருகையால் அச்சப்படுகிறதா எடப்பாடி அணி? ‘மனித வெடிகுண்டு’ சர்ச்சையால் செக் வைக்க முயற்சி!

Tamil Mint

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி, இணையதளத்தில் இருந்து நீக்கம்

Tamil Mint

“democracy or democrazy?” – நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

Lekha Shree