திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது


பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் மலை வடிவில் ஜோதியாக காட்சி அளித்தது மற்றும் பார்வதிக்கு சிவபெருமான் இட பாகம் வழங்கிய நாளை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வருகிறது. 

இன்றும் கார்த்திகை தீபா திருவிழாவை ஒட்டி அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. 

கடந்த நவம்பர் 20ஆம் தேதி, திருவண்ணாமலையில் தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 

இன்று அதிகாலை 03.30 மணி அளவில் ஸ்வாமி சன்னதி மூல கருவறை முன் 5 மடக்குகளில் பஞ்சமுகதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்பு அதிகாலை நான்கு மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. 

Also Read  தமிழ்நாடு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாத காலம் அவகாசம்…!

இதையடுத்து மாலை பஞ்ச மூர்த்திகள்  (விநாயகர், வள்ளி தெய்வாணை சமேத முருகர், அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர்) தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.  

பின்பு அர்த்தநாரிஸ்வரர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி நடனமாடி காட்சியளித்தார். காலையில் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளையும் கொண்டு கொடி மரத்தின் முன்பாக உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்த்தனர். 

Also Read  அதிமுக குடுமி பாஜக கையில்…! வானதி சீனிவாசன் அதிரடி பேட்டி

பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் 5 தீப்பந்தகள் ஏற்றப்பட்டு அவைகளை கொண்டு 2,668 அடி மலை உயரத்தில் உள்ளவர்களுக்கு தெரியும் படி காண்பிக்கப்பட்டது. 

தீப விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுதும் வண்ண மின்விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 

Also Read  தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய 'கேப்டன்' விஜயகாந்த்! - சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

கொரோனா தொற்றின் காரணமாக மகாதீப நிகழ்வின் போது பக்தர்கள் மலையேறவும் கிரிவலம் சுற்றவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. 

விழாவில் அரசு உத்தரவுப்படி பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.  தீப திருவிழா பாதுகாப்பு பணியில், 2,000 போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.. மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

Ramya Tamil

வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட கொரோனா நோயாளி உயிரிழப்பு..!

Lekha Shree

தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி – விபி துரைசாமி

Tamil Mint

நவம்பர் மாதம் முதல் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி?

Lekha Shree

டாஸ்மாக் திறப்பு ஏன்? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Lekha Shree

பாடப் புத்தகத்தில் கருணாநிதி பெயரை நீக்க ரூ.23 கோடி செலவு!

sathya suganthi

டிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் – அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்

Tamil Mint

அக்டோபர் 1 முதல் மேலும் தளர்வுகளுக்கு வாய்ப்பு

Tamil Mint

இரவில் மதுபோதையில் பெண்ணிடம் அத்துமீறல்: காலையில் செல்போனை கானும் கண்டுப்பிடிச்சு கொடுங்கனு புகார்: வெளுத்து விட்ட போலீஸார்.!

mani maran

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்பு

Tamil Mint

தமிழகத்தில் முதல்நாள் இரவு ஊரடங்கு நிறைவு

Devaraj

ஆபாச பேட்டி எடுத்த சென்னை டாக்ஸ் முடக்கம்! யூடியூப்பில் 200 ஆபாச வீடியோக்கள் நீக்கம்!

Tamil Mint