தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பொருட்கள் விற்பனைக்கு அமோக வரவேற்பு


தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஆவினின் சிறப்பு இனிப்புகளின் விற்பனை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் கூடுதலாக 50 தற்காலிக சிறப்பு இனிப்பு விற்பனை நிலையம் அமைத்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் தலைமையிலான அம்மாவின் அரசு பால் வளத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலுக்கு இணங்க தரம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் பொருட்களை வழங்கி வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கீழ்கண்ட 6 வகையான சிறப்பு இனிப்புகளின் விற்பனை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

1) ஸ்டப்டு டிரை ஜாமுன்(250 கி) – ரூ.190, 2) நட்டி மில்க் கேக் (250 கி) – ரூ.190, 3) ஸ்டப்டு மோதி பாக் (250 கி) – ரூ.170, 4) காஜு பிஸ்தா ரோல்(250 கி) – ரூ.225, 5) பிளேவர்டு மில்க் பர்பி (250 கி) –ரூ.165

Also Read  தமிழகத்தில் 2,200-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

இந்த 5 வகையான இனிப்புகள் அடங்கிய காம்போ பேக் 500 கிராம் – ரூ.375, நெய் முறுக்கு (250 கி) – ரூ.100 ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் அனைத்தும் உயரிய தரத்துடன் சுகாதார முறையில் தயாரிக்கப்படுகிறது.  இப்பொருட்களின் சுவை காரணமாகவும் தரம் காரணமாகவும் மக்கள் விரும்பி வாங்குகின்றனர். அதனால் விற்பனை அதிகமாகின்றது. 

எனவே, இரவு பகல் பாராமல் கூடுதலாக நபர்களை பயன்படுத்தி விஜய் டேனி மற்றும் அவருடைய குழுவினர்கள் ஆவின் சிறப்பு இனிப்புகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Also Read  மோடியோ மோடி… பின்றார்யா விஜயன்… ட்விட்டரை தெறிக்கவிட்ட சித்தார்த்!

சிறப்பு இனிப்புகள் வாங்க ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அசோக் லே லேண்ட் கம்பெனி, ஹுண்டாய் கம்பெனி, நிசான் கம்பெனி, லயோலா கல்லூரி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் இருந்தும், அரசு அலுவலகங்கள், சிக்கன கூட்டுறவு சங்கங்கள் சார்பாகவும் ஆர்டர்கள் கோரப்பட்டுள்ளது. இவற்றை மொத்தமாக வாங்க கீழ்கண்ட நபர்களின் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். 1) சிவகுமார் –9345660380, 2) பௌர்ணமி – 9384092349, 3)தமிழன் – 9566860286 மற்றும் 4) சுமதி – 9790773955.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வாக்குச்சாவடியில் சிவகுமாராக மாறிய அஜித்…! “தல”யை டென்சனாக்கிய செல்பி பாய்…!

Devaraj

தமிழகத்தில் இன்று முதல் 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி.!

suma lekha

தன் பிறந்த நாளில் விஜய்-ஸ்ருதியை சவாலுக்கு இழுத்த மகேஷ்பாபு !

Tamil Mint

“சசிகலா தாய் அல்ல பேய்” – நத்தம் விஸ்வநாதனின் அதிரவைக்கும் பேச்சு…!

sathya suganthi

ஊரடங்கு குறித்து முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

“ஆன்லைன் வகுப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட வேண்டும்” – முதலமைச்சர் அதிரடி!

Lekha Shree

ரஜினி கட்சி எப்போது? புதிய தகவல்

Tamil Mint

தமிழகம்: தசம மதிப்பில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…!

Lekha Shree

தமிழகத்துக்கு ரூ 300 கோடி உடனே வேண்டும்: மோடியிடம் ஈபிஎஸ் கோரிக்கை

Tamil Mint

கொடைக்கானலுல சட்டவிரோதமா சொத்து – வரிமானவரித்துறையை சரிகட்ட PSBBல சீட்டு – குட்டிபத்மினி புகார்

sathya suganthi

“பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாட தடை” : செப்டம்பர் 15-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.!

mani maran

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் வரை இலவச அரிசி

Tamil Mint