துணை நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் நடிகர் தவசி காலமானார்.

மருத்துவமனையில் ஐ.சி.யுவில் புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் தவசி இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சில தினங்களுக்கு முன்

புற்றுநோய் சிகிச்சைக்கு நிதி உதவி கோரி தவசி  அவர்கள் சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றைப் பதிவிட்டார். அந்தக் காணொளி வைரலாகி பல பிரபலங்கள் அவருக்கு உதவிக்கரம் நீட்டினர். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி மற்றும் சௌந்தரராஜன். 

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ டாக்டர். பி. சரவணனும் தவசி அவர்கள் இலவசமாக சிகிச்சை பெற தன் சூர்யா டிரஸ்ட் மூலம் உதவினார்.  தவாசிக்கு உணவுக்குழாயில் உறைகுழாய் வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

Also Read  சிம்பு-கௌதம் மேனன் இணையும் படத்தின் ஹீரோயின் இவரா? வெளியான 'சூப்பர்' அப்டேட்!

ஆனால் அது ஏதும் பலனளிக்கவில்லை. அவர் பேசிய காணொளியில் தான் முப்பது வருடங்களாக திரைத்துறையில் பணியாற்றி உள்ளதாகவும் கிழக்குசீமை படம் முதல் இன்னும் வெளிவராத அண்ணாத்தே படம் வரையிலும் பணியாற்றி உள்ளதாக கூறினார். 

மேலும் அவர்  “இந்த வகையான நோய்க்கு நான் இரையாகிவிடுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.  நான் எதற்கும் தகுதியானவன் அல்ல.  என்னால் சரியாக பேசக்கூட முடியவில்லை” எனக் கூறி இருந்தார். 

Also Read  அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை - பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

சிறிய வேடங்களில் தோன்றினாலும் மக்கள் மனதில் தனக்கென ஒரு முத்திரை பதித்த கலைஞன் நடிகர் தவசி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைந்தாலும் அவர் நடித்த படங்களின் மூலம் மக்கள் மனதில் என்றும் வாழ்ந்திருப்பார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருமாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வாபஸ்

Tamil Mint

தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அலைமோதும் மக்கள் கூட்டம்!

Tamil Mint

திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள்: அறிவாலயத்தில் அவசர ஆலோசனை

Tamil Mint

தமிழகத்தில் ஜனவரி 2-ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

Tamil Mint

’தமிழ்நாட்டின் சிறந்த பெண் எம்.எல்.ஏ’ விருது பெற்றவருக்கு சீட் கொடுக்காத அதிமுக! ஏமாற்றத்தில் ஆதரவாளர்கள்!

Lekha Shree

தமிழகம்: படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு..!

Lekha Shree

போதை பொருள் வழக்கு – விசாரணைக்கு ஆஜரான நடிகை ரகுல் ப்ரீத் சிங்..!

Lekha Shree

“5 மாதங்களுக்கு எழுந்து நிற்க முடியாது” – தனது உடல்நலம் குறித்து யாஷிகா கொடுத்த அப்டேட்..!

Lekha Shree

காதலரின் பெயரை பச்சை குத்திக் கொண்ட சீரியல் நடிகை..!

suma lekha

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்!

Lekha Shree

நான் எச்சரித்திருக்காவிட்டால் அண்ணா பல்கலைக்கழகம் இல்லாமல் போயிருக்கும்: ஸ்டாலின்

Tamil Mint

“பிச்சை எடு” என கூறிய நெட்டிசனுக்கு தக்க பதிலடி கொடுத்த ‘கேப்டன்’ மகன்..!

Lekha Shree