நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை


நிவர் புயலின் தாக்கம் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் காண முடிகிறது. பலத்த காற்றுடன் கூடிய மழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. 

சென்னையின் முக்கிய பகுதிகளில் கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. வங்க கடலில்  மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளது. 

இப்புயலானது நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. 

அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Also Read  கடத்தல் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!!

இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தன் கட்சியின் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 

அதன் முடிவில் இன்று மாநிலம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து முதல்வர் பேசுகையில் “புயல் கரையை கடக்கும் பொழுது மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காகவே இந்த விடுமுறையை அரசு அறிவித்துள்ளது. மக்களுக்காவே இந்த அரசு இருக்கிறது. அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு பணியாளர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள். விடுமுறை நீட்டிப்பு குறித்து நிலைமைக்கு ஏற்றவாறு அரசு முடிவு எடுக்கும். புயல் கரையை கடந்துவிட்ட பிறகே மக்கள் வெளியே வர கேட்டுக்கொள்கிறேன். மழை பொழிவதைக் குறித்தே செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கப்படும். ஏரிகளை பலப்படுத்தவும் மணல் மூட்டைகளை பயன்படுத்தவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என பிரதமர்  மோடி தெரிவித்துள்ளார்” எனக் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்: முழு விவரம் இதோ

suma lekha

“சசிகலாவின் மானசீக ஆதரவு எங்களுக்குத்தான்” -டிடிவி.தினகரன்

Devaraj

தமிழகம்: அதிமுகவின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று தொடங்கியது

Tamil Mint

ராவணனாக மாறிய சீமான்! இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ!

Lekha Shree

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!

Lekha Shree

சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை…! வழக்கின் முழு விவரம்…!

Devaraj

முன்னாள் நீதிபதி ஏ ஆர் லட்சுமணன் காலமானார்

Tamil Mint

தமிழக அமைச்சரவையில் டெல்டா மாவட்டத்தினருக்கு வாய்ப்பு இல்லை…!

Lekha Shree

தமிழ்நாடு மீன்வளத்துறையில் 608 காலியிடங்கள் அறிவிப்பு

Tamil Mint

நாளை கார்த்திகை தீபம்: திருவண்ணாமலையில் ஏற்பாடுகள் தீவிரம்

Tamil Mint

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

“ஊரடங்கு காலத்தில் மதுபானக் கடைகளை மூட தயங்குவது ஏன்?” – சீமான்

Lekha Shree