நிலத்தகராறு காரணமாக இரண்டு நபரை சுட்டு காயப்படுத்திய 80 வயது முதியவர்


திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி நகரில் இன்று பிற்பகல் ஒரு முதியவர் துப்பாக்கியை எடுத்து இரண்டு நபரை சுட்டு காயப்படுத்திய காட்சி அங்கே உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

இச்சம்பவம் அங்கேயுள்ள பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில் சுட்டவர் பெயர் நடராஜன் என்றும் அவருக்கு 80 வயது என்றும் காயாமடைந்தவர்களின் பெயர்கள் சுப்ரமணி மற்றும் பழனிசாமி என்றும் தெரியவந்துள்ளது. 

Also Read  சூரியிடம் மோசடி: 2 பேர் மீது வழக்குப் பதிவு

கூடுதல் விசாரணையில் இத்துப்பாக்கிச்சூட்டின் பின்னணி நிலத்தகராறு என தெரியவந்துள்ளது. இளங்கோவன் என்ற விவசாயி அப்பர் தெருவில் 12 சென்ட் நிலம் வைத்துள்ளார். இப்பகுதிக்கு அருகில் வசிக்கும் நடராஜன் (தொழிலதிபர்) தனக்கும் அச்சொத்தில் பங்கு இருப்பதாக கூறி தகராறு செய்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து இளங்கோவன் தன் பகுதிக்கு வேலி போட முயன்றபோது அதை தடுத்துள்ளார் நடராஜன். அதனால் தனது உறவினர்களான சுப்ரமணி மற்றும் பழனிசாமியை பேச்சுவார்த்தை நடத்த அழைத்துள்ளார் இளங்கோவன். ஆனால் பேச்சுவார்த்தை முற்றி விபரீதத்தில் முடிவடைந்துள்ளது என போலீஸ் விசாரணையில் கூறப்பட்டுள்ளது. 

Also Read  திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது

காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நடராஜனை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காணொளியைக் காண கீழே அழுத்தவும்

Credits: The News Minute


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாரம்பரிய கலைகளை அழித்து விடாதீர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

Tamil Mint

கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

Devaraj

கூடுதல் தளர்வுகள்… மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்

Lekha Shree

தமிழ்நாடு: செப்டம்பர் 13-ல் மாநிலங்களவை தேர்தல்…!

Lekha Shree

“இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என்பதே சரி!” – முதலமைச்சர் ஸ்டாலின்

Lekha Shree

தேர்தல் வேட்டை ஆரம்பம்… ஆவணங்களின்றி பணமும் தங்கமும் குவிய தொடங்கியுள்ளது… பாதிக்கப்படுவது யார்?

VIGNESH PERUMAL

அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: முதல்வர் கொடியேற்றினார்

Tamil Mint

லண்டனில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலுக்கு ஒப்படைப்பு

Tamil Mint

மநீம 4-ம் ஆண்டு விழா; பிரம்மாண்ட மாநாடுடன் களமிறங்கும் கமல்!

Tamil Mint

ஐசியூவில் ஆ.ராசா மனைவி! நேரில் சென்று விசாரித்த மு.க.ஸ்டாலின்!

Lekha Shree

சென்னை விமான நிலைய சரக்கு பிரிவு பகுதியில் 500க்கும் மேற்பட்ட தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணிகளை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tamil Mint

நீட் தோல்வி பயம்: அரியலூரில் ஒரு மாணவி தற்கொலை!

suma lekha