‘நிவர்’ சேதங்களை கண்காணிக்க முதல்வர் இ.பி.எஸ் கடலூர் விரைந்தார்


இன்று அதிகாலை 2:30 மணியளவில் நிவர் புயலானது கரையை கடந்தது. 

இதனைத்தொடர்ந்து சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார் முதல்வர் எடப்பாடி. 

மேலும் ‘நிவர்’ சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை சரிபார்க்க முதலமைச்சர் இன்று சாலை வழியாக கடலூரை அடைந்தார். 

வெள்ளத்தால் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை அறிந்து கொள்ள விவசாயிகளுடன் உரையாடினார். 

Also Read  பீலா ராஜேஷ் கணவர் ராஜேஷ் தாஸ் மீது பெண் எஸ்.பி. பாலியல் புகார்! முழு விவரம்!

அதைத்தொடர்ந்து அவர் நிவாரணப் பணிகளைக் கண்காணித்து, மக்களின் துன்பங்களைத் தீர்க்க மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆய்வு செய்தார். 

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோப்புகளையும் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதல்வர். 

அப்போது புயலால் சேதமான படகுகளுக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் தேவனாம்பட்டினம் முகாமில் தங்கியுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நிவாரண பொருட்களை வழங்கினார். 

Also Read  தமிழகம்: கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்!

பின்பு தேசிய பேரிடர் மீட்பு குழுவினரிடம் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

நிவர் புயலின் எதிரொலியால் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளன, மரங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன மற்றும் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 

மக்களை இப்புயல் சேதத்தில் இருந்து மீட்க விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு நம்பிக்கை அளித்துள்ளது. 

Also Read  "பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாட தடை" : செப்டம்பர் 15-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.!

தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 

மேலும் மீட்பு பணிகளுக்கு ஏழு குழுக்கள் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் செயல்படுவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கணவனை திருத்த கண்டித்த மனைவி….. மதுபோதையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை…

VIGNESH PERUMAL

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

சிக்கலில் லட்சுமி விலாஸ் வங்கி, அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

Tamil Mint

தமிழ்நாடு- ஆந்திரா இடையே பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி

Tamil Mint

தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகள் அறிவிப்பு

Tamil Mint

ஸ்டாலினை எதிர்க்கும், ஜெயலலிதாவின் அன்பைப் பெற்ற திருநங்கை…!

Lekha Shree

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

பேறுகால விடுப்பு உயர்வு: அரசாணை குறித்து விளக்கம்..!

Lekha Shree

விவசாயிகளுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துச் செய்தி

Tamil Mint

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு புதிய செயலி அறிமுகம்! பட்டதாரி இளைஞர்களின் அசத்தல் திட்டம்!

Tamil Mint

அவசர உதவிக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.. சென்னை காவல்துறை அறிவிப்பு..

Ramya Tamil

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி உள்ளது: அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்..!

suma lekha