நிவர் புயல் மீட்பு நடவடிக்கை: தமிழகத்தில் ராணுவம் வருகை


வங்கக் கடலில் உருவான ‘நிவர்’ புயல் மாமல்லபுரம்-காரைக்கால் இடையே இன்று கரையை கடக்க உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரு நாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read  கோயில் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் - அமைச்சர் அதிரடி உத்தரவு

கடலோர பகுதிகளில், ‘நிவர்’ புயல் பாதிப்பில் இருந்து மக்களை மீட்க 5 வெள்ள மீட்பு குழுவினர் மற்றும் நீச்சல் குழுவினர் தயராக உள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்காக ஐ.என்.எஸ். ஜோதி கப்பல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நிவர்’ புயலால் பாதிப்பு ஏற்பட்டால், உதவி செய்வதற்கு தயாராக உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. 

Also Read  சென்னையில் அதிர வைக்கும் அளவுக்கு எகிறிய பாதிப்பு எண்ணிக்கை! முழு விவரம் இதோ!

இதனை தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு 12 பேரிடர் மீட்பு குழுக்கள், 2 பொறியாளர் குழுக்கள் தயாராக உள்ளதாகவும் இந்திய ராணுவம் கூறியுள்ளது. 

மேலும் தொலை தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட வாய்ப்பிருப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி நிலவரங்கள் குறித்து மாநில, மாவட்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டறிந்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Also Read  மின்கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு : அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்கு சாத்தியங்கள்-உலக சுகாதார நிறுவனம்

Tamil Mint

சொத்து வரி செலுத்தினார் ரஜினி

Tamil Mint

செல்போன் நம்பரை லீக் செய்த பாஜகவினர் : நடிகர் சித்தார்த் பகீர் புகார்…!

Devaraj

வேலூரில் சர்வதேச தரத்தில் அதிநவீன வசதிகள் கூடிய ‘நறுவீ ‘ மருத்துவமனை திறப்பு!

Tamil Mint

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

Tamil Mint

ஆட்டோவை கார் போல் மாற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய நபர்!

Shanmugapriya

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

Tamil Mint

கருப்பர் கூட்டம் செந்தில் திமுக ஐடி விங் ஊழியராம்: போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்

Tamil Mint

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: தேசிய வானிலை மையம் எச்சரிக்கை

sathya suganthi

வாகன காப்பீடு மோசடி வழக்கு; தீவிரமடையும் விசாரணை!

Tamil Mint

சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

Tamil Mint

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை – தமிழக அரசு உத்தரவு

sathya suganthi