நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்


பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து கருத்துகளை தெரிவிக்குமாறு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தனது டுவிட்டர் வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார். வெபினார் மூலம் நேரலையில் கலந்துரையாடிய ரமேஷ் பொக்ரியால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் கொரோனா ஊரடங்கால், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கும் சூழலில் அடுத்தாண்டு (2021) நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விகளை பலரும் முன்வைத்திருந்தனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை என அவர்  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Also Read  இந்தியர்களுக்கு அனுமதி - பச்சைக்கொடி காட்டிய யுஏஇ…!

“அடுத்தாண்டு நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை. கடந்த நீட் தேர்வு 3 முறை ஒத்திவைக்கப்பட்டு பின்பு மீண்டும் நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு அவர்களின் தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பையும் அளித்தோம். நீட் தேர்வை ரத்து செய்தால் அது மாணவர்கள் மற்றும் தேசத்துக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். எனவே, தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறைவு.

Also Read  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பதிவை நீக்கிய ட்விட்டர்! காரணம் என்ன?

பாடத்திட்டம் குறைக்கப்படுவது குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறோம். பாடத்திட்டக் குறைப்பின் அடிப்படையில் எத்தனை கேள்விகள், எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. குறைந்தபட்சம் 20 சதவீதம் பாடத்திட்டங்களை குறைக்கலாம் என ஆலோசிக்கிறோம்” என்று மத்திய கல்வி அமைச்சர் பதிலளித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பிய ஐஸ்வர்யா ராய், நிம்மதி பெருமூச்சுவிடும் ரசிகர்கள்

Tamil Mint

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை நெருங்குகிறது

Tamil Mint

சுதந்திர தினத்தன்று அறிமுகமாகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்?

Lekha Shree

சேமிப்பு தாரர்களுக்கு நிர்மலா சீதாராம் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி…!

Devaraj

மத்திய அமைச்சரவையில் பதவி விலகிய மூத்த அமைச்சர்கள்…! காரணம் இதுதான்…!

sathya suganthi

‘அப்போது விஸ்மயா இப்போது சுனிஷா’ – கேரளாவில் தொடரும் தற்கொலைகள்… பதறவைக்கும் ஆடியோ வெளியீடு..!

Lekha Shree

இப்படியும் ஒரு முகக்கவசமா..? – வைரலாகும் வீடியோ இதோ..!

Lekha Shree

புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு – ஆய்வில் தகவல்

Devaraj

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் மிதக்கும் மும்பை…!

Lekha Shree

கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பானதா? அதிர்ச்சித் தகவல்கள்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி – உலகளவில் இந்தியா முதலிடம்…!

Devaraj