பழனி மலைக்கு வந்த கேரள பெண்: கூட்டு பாலியல் பாலியல் கொடுமைக்கு ஆளான கொடூரம்.


பாலியல் வன்புணர்வு இந்த வார்த்தையை தற்போதெல்லாம் தினமும் நம்மால் கேட்க முடிகிறது. பழனி மலை முருகன் கோவிலில் கடந்த மாதம்19-ம் தேதி வழிபாட்டிற்காக கேரளாவை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவன் தனது கணவருடன் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு காட்டுமிராண்டி கும்பல் கணவனை அடித்து துரத்திவிட்டு அந்த பெண்ணை கடத்தி சென்றுள்ளனர். அதன்பின் அங்குள்ள விடுதிக்கு கொண்டு சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் கடுமையாக உடல் பாதிக்கப்பட்ட அந்த பெண் கண்ணூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்க அந்த பெண் சென்றபோது போலீசார் புகாரை ஏற்க மறுத்துள்ளனர். இந்த கொடூரம் குறித்த செய்தி தீயை பரவ கொதித்தெழுந்த கேரள டிஜிபி தமிழக டிஜிபி-க்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராமதாஸ், “தமிழ்நாட்டின் புனிதத்தலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதும், பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்த புகாரைகூட காவல்துஹ்ரை வாங்க மறுத்திருப்பதும் தமிழகம் தலைகுனிய வேண்டிய செயல்கள். இதற்கு காரணமான அனைவரும் கடுமையாக தண்டிக்கபட வேண்டும்” என ஆதங்கமாக கூறியுள்ளார். சமூகத்தில் உள்ள சில கொடூர பிறவிகளால் கட்டவிழ்த்து விடப்டும் இந்த மாதிரியான கொடூரங்கள் எப்போது ஒழிந்து பெண்கள் எந்த வித அச்சமும் இன்றி பொதுவெளியில் சுதந்திரமாக உலாவ போகிறார்கள் என்பது தற்போது வரை உள்ள மில்லியன் டாலர் கேள்வியாக தொடர்கிறது.

Also Read  தெலுங்கானா விபத்து: சிசிடிவி காட்சியால் வெளியான உண்மை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை… பிரபல சீரியல் நடிகர் கைது!

Lekha Shree

சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது…!

Lekha Shree

பாலியல் வழக்கு – PSBB பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமின் மனு தள்ளுபடி!

Lekha Shree

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வாகன விபத்தில் உயிரிழப்பு

VIGNESH PERUMAL

வாகனத்தில் கட்டிவைத்து நாயை வதைத்த கல்நெஞ்சக்காரர் கைது…!

Lekha Shree

சீன செயலிகள் மூலம் இந்தியர்களிடம் இருந்து ரூ.150 கோடி சுருட்டல்…!

Lekha Shree

பாலியல் புகார் – தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு சிறை!

Lekha Shree

காற்று வாங்க வெளியே வந்த பொது மக்களை அரிவாளால் வெட்டிய போதை ஆசாமி

sathya suganthi

திருச்சி : பாலியல் புகாரில் பிரபல கல்லூரி பேராசிரியர் சஸ்பென்ட்…!

sathya suganthi

கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர இளைஞர்..

VIGNESH PERUMAL

சின்ன சேலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 4 ஆண்டுகள் சிறை…!

Lekha Shree

காதல் மனைவியை சூட்கேசில் வைத்து எரித்து கொன்ற கொடூரன் – வெளியான சிசிடிவி காட்சிகள்!

Lekha Shree