பிபிசியின் ‘100 பெண்கள் 2020’ பட்டியலில் ‘தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழுவின் இசைவாணி இடம்பிடித்துள்ளார்


‘தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்னும் இசைக்குழு மேடை கச்சேரிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் தங்களின்  பாடல்கள் மூலம் சமத்துவத்தை எடுத்துரைத்து வந்தனர். 

அக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் கானா பாடகர் இசைவாணி. 

டென்மா, சந்தோஷ்குமார் மற்றும் அருண் ரஞ்சன் ஆகியோரால் இயக்கப்படும் மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் தலைமையிலான நீலம் கலாச்சார மையம் இணைந்து இந்த ‘தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்னும் இசைக்குழுவை உருவாக்கினார். 

இன்று பிபிசியின் ‘100 பெண்கள் 2020’ பட்டியலில் மற்ற நாட்டு பெண்களுடன் இசைவாணியும் இடம்பிடித்துள்ளார். 

Also Read  முதல் தமிழன் - இந்திய பாராலிம்பிக் அணியின் கேப்டனாக மாரியப்பன் தேர்வு!

இதுகுறித்து அவர் கூறுகையில் “நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. இந்த பயணத்தில் எனக்கு உறுதியான இருந்த அனைவருக்கும் மிக்க நன்றி. குறிப்ப என் தந்தைக்கு நன்றி. அவர் தான் என்னை பாட ஊக்குவித்தார்” என மிக உற்சாகமாக கூறினார். 

“கானா இசை தமிழ்நாட்டின் வடக்கு சென்னையின் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வெளிப்பட்ட ஒரு கலை ஆகும். ஆண்களின் ஆதிக்கமே இக்கலையில் நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட ஆண் ஆதிக்கம் நிறைந்த சமூகத்தில் இசைவாணி, நம்நாட்டின் தனித்துவமான கானா பாடகர்களில் ஒருவர் என்றல் அது மிகை ஆகாது. மற்ற பிரபலமான ஆண் பாடகர்களுடன் ஒரே மேடையில் உற்சாகத்தோடு அவர்களுடன் பாடல்கள் பாடி இசைவாணி இன்று வெற்றிகரமாக சாதனை படைத்துள்ளார். இது மற்ற இளம் பெண் கானா பாடகர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்கிறது” என பிபிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

Also Read  நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரிகள் குறையுமா?

மாட்டு இறைச்சி தடை ஆகட்டும் சபரிமலை விவகாரங்கள் ஆகட்டும் ‘தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழு தங்களின் கருத்துக்களை பதிவிட ஒருபோதும் தவறியதில்லை. 

இவர்களின் இசைக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதற்கு காரணம் அவர்களின் பாடல் வரிகளில் உள்ள எளிமையான வார்த்தைகளும் அதை அவர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமும் தான். 

Also Read  மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள் - பாபா ராம்தேவ்

தான் இந்தக்குழுவில் ஒருபோதும் குறைவாக நடத்தப்படவில்லை எனவும் அவர்களில் ஒருவராகவே என்னை நடத்தினர் என்றும் இசைவாணி நெகிழ்ச்சியாக கூறினார். 

மேலும் அவர் “என்னால் முடிந்த அளவுக்கு சமூகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயற்சிப்பேன். அதிகமான பெண்களுக்கு வாய்ப்புகளை வழங்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். பெண்கள் எங்கு ஒடுக்கப்பட்டாலும் அவர்கள் தைரியமாக வெளியே வர வேண்டும், நான் அவர்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறேன்” என தன் கருத்தைத் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 20 பேர் உயிரிழப்பு…!

Lekha Shree

தமிழகம்: +2 பொதுத்தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு..!

Lekha Shree

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை

Tamil Mint

“கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்க மாட்டு சாணம் பயன்படுத்தப்படுகிறது” – தேசிய பசு ஆணையம்

Shanmugapriya

கஞ்சாவிற்கு அடிமையாக இருந்த மகனை கொலை செய்த தாய்! – அதிர்ச்சி சம்பவம்

Tamil Mint

111 நாடுகளில் வேகமாக பரவும் டெல்டா வைரஸ்… எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு..!

Lekha Shree

தமிழகம்: டெல்டா பிளஸ் வைரஸால் 3 பேர் பாதிப்பு..!

Lekha Shree

மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று

Tamil Mint

தமிழக சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு விருது

Tamil Mint

நிபா வைரசால் சிறுவன் பலி! கொரோனாவை அடுத்து புதிய அச்சுறுத்தல்!

Lekha Shree

செங்கல்பட்டு: அரசு மருத்துவமனையில் மேற்கூரை விழுந்து விபத்து…! அதிர்ஷடவசமாக உயிர்தப்பிய குழந்தை..!

Lekha Shree

5 மாத குழந்தையின் உயிரை காக்கும் மருந்திற்கான ரூ.6 கோடி ஜிஎஸ்டி வரி ரத்து!

Tamil Mint