பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி


பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக- ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

243 இடங்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இந்த வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வந்தது.

இன்று அதிகாலையில் அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Also Read  கஞ்சாவிற்கு அடிமையாக இருந்த மகனை கொலை செய்த தாய்! - அதிர்ச்சி சம்பவம்

அதன்படி, பாஜக 74 இடங்களையும், ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. 

விகாஷீல் இன்சான் கட்சி 4 இடங்களையும், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி 4 இடங்களையும் வென்றுள்ளன.

எதிர்க்கட்சிகள் அமைத்த மகா கூட்டணிக்கு 110 இடங்கள் கிடைத்துள்ளன. 

ராஷ்ட்ரிய ஜனதாதளம் 75 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 

Also Read  ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

காங்கிரசுக்கு 19 இடங்களும், இடதுசாரிக் கட்சிகளுக்கு 16 இடங்களும் கிடைத்துள்ளன.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 5 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

ஐக்கிய ஜனதாதளம் கட்சியை எதிர்த்து வேட்பாளர்களைக் களமிறக்கிய சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி 143 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

Also Read  பெண் போலீஸ் மர்ம மரணம் - இணையத்தில் வைரலாகும் #justice_for_rupa_tirkey

இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் பீகாரில் மீண்டும் ஆட்சியைக் தக்க வைத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரெம்டெசிவர் மருந்துக்கு இறக்குமதி வரி ரத்து

Jaya Thilagan

கம்பளா போட்டியில் இந்தியாவின் உசேன்போல்ட் சாதனை…!

Devaraj

மார்ச் முதல் மே வரை வெயில் வாட்டி வதைக்கும் – இந்திய வானிலை மையம் அதிர்ச்சி ரிப்போர்ட்

Jaya Thilagan

ஆப்கானிஸ்தான்: 150 இந்தியர்கள் கடத்தல்? மறுக்கும் தாலிபான்கள்..! என்ன நடக்கிறது?

Lekha Shree

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இந்தி மொழிக்கு முக்கியதுவம்: கொந்தளித்த பஞ்சாப் முதல்வர்.!

suma lekha

இந்த ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்திவிடாதீர்கள் – தயாரிப்பு நிறுவனமே சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு! – அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

Lekha Shree

புதுச்சேரி சபாநாயகர் திடீர் உடல்நலக் குறை : உடல்நிலை குறித்த தற்போதைய நிலவரம்!

suma lekha

தோனியை காண 1463கி.மீ நடைப்பயணம் மேற்கொண்ட இளைஞர்: தோனி இல்லாததால் ஏமாற்றம்.!

mani maran

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குறித்த ஆபாச பதிவு… பேராசிரியர் கைது!

Lekha Shree

ராகுல்காந்தியை அடுத்து காங்கிரஸ் கட்சியினரின் 5000 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!

Lekha Shree

“இப்படி அவமானப்படுத்த வேண்டாம்” – சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த முதல்வர் மம்தா பானர்ஜி

Lekha Shree