புதுச்சேரியில் கஞ்சாவுக்காக போதை ஊசி விற்ற ஜிப்மர் மருத்துவர் கைது!


அறுவைச் சிகிச்சையின்போது நோயாளிகளுக்கு மயக்கம் வருவதற்காக பயன்படுத்தப்படும் கேட்டமைன் மருந்தை, கஞ்சாவுக்கு பண்டமாற்று செய்து வாங்கிய கும்பல், அதை அதிக விலைக்கு விற்றுள்ளது. என்ன நடந்தது புதுச்சேரியில்.

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராக பணியாற்றி வருபவர் 29 வயதான துரையரசன். அறுவைச் சிகிச்சையின்போது எந்த நோயாளிக்கு, எவ்வளவு மயக்க மருந்து செலுத்த வேண்டும் என்பதை தெரிவிப்பதே இவரது பணி. மருத்துவராக இருந்தாலும், கஞ்சா போதைக்கு அடிமையாகிவிட்டவர் துரையரசன்.

Also Read  பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் - சீமான் ட்வீட்!

கஞ்சாவுக்காக எதை வேண்டுமானாலும் துரையரசன் செய்யத் தயாராக இருப்பதை அறிந்து கொண்டது போதைப் பொருள் விற்பனைக் கும்பல். கேட்கும்போதெல்லாம் கஞ்சாவை கொடுத்த துரையரசனை தங்களது கைக்குள் வைத்துக் கொண்ட கும்பல், குறைந்த விலைக்கு கேட்டமைன் மயக்க மருந்தை வாங்கியுள்ளது. இந்த கேட்டமைன் மயக்க மருந்தை, கஞ்சா போதை போதாது என்பவர்களுக்கு கூடுதல் போதைக்காக விற்று வந்துள்ளது இந்த கும்பல்.

இதையடுத்து, ஜிப்மர் மருத்துவர் துரையரசனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 3 கேட்டமைன் மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Also Read  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக-திமுக: கட்சி தாங்க வேற…! ஆன தேர்தல் அறிக்கை ஒன்னுதான்…! – நெட்டிசன்கள் கலாய்…!

Devaraj

தமிழகத்தில் 7000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

மரக்காணம்அருகே பழமையான சிலை கண்டெடுப்பு

Tamil Mint

தமிழகம்: இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார்

Tamil Mint

திருடு போன துப்புரவு வாகனங்கள் – தேடும் துாய்மை பணியாளர்கள்!

Lekha Shree

கொரோனா அறிகுறியா? மருத்துவமனைக்கு செல்லாமல் ஸ்க்ரீனிங் சென்டருக்கு வாருங்கள் – ராதாகிருஷ்ணன்

Devaraj

வேல் யாத்திரை நடைபெறுமா? தமிழகமெங்கும் பதட்டம், போலீஸ் குவிப்பு

Tamil Mint

ராமேஸ்வரம் பற்றி 120 தகவல்கள்

Tamil Mint

தமிழக தேர்தலில் மாஸ் காட்டிய பெண்கள்! முழு விவரம் இதோ!

Lekha Shree

தனியார் மருத்துவமனைகளுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி

Tamil Mint

சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: சிபிஐ புதிய தகவல்

Tamil Mint

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint