பெண் ஊழியர்களுக்கு தற்காப்பு பயிற்சி: பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம்


பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம் (பிஎம்டிசி) தனது பெண் ஊழியர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க உள்ளது. 

கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்பு கலைகள், பாலின உணர்திறன், சுய உறுதிப்பாடு, சட்ட அறிவு, ஆலோசனைத் திறன் மற்றும் பொதுப் பேச்சு ஆகியவை அப்பயிற்சியில் அடங்கும்.

Also Read  மதம் மாற்ற முயன்றதாக புகார்…! ரயில் இருந்து நடுவழியில் இறக்கி விடப்பட்ட கன்னியாஸ்திரிகள்…! நடந்தது என்ன?

நடத்துனர்களிடமிருந்தும், அவர்களது ஆண் சகாக்களிடமிருந்தும் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைகளில் இருந்தும் தங்களை பாதுகாத்து  கொள்ள  பி.எம்.டி.சி யின் பெண் ஊழியர்களுக்கு அப்பயிற்சி அளிக்கவிருப்பதாக பி.எம்.டி.சி யின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து வயது பெண் ஊழியர்களும் நுட்பங்களைக் கற்றுக் கொள்ளும் வகையில் இந்த பயிற்சி வடிவமைக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

Also Read  கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 61,775 பேர் குணமடைந்துள்ளனர்

“அன்றாட வாழ்க்கையில் பெண்கள் சந்திக்கும் பொதுவான அச்சுறுத்தல் சூழ்நிலைகள் மற்றும் எளிமையான தற்காப்பு மற்றும் தாக்குதல் நகர்வுகளைப் பயன்படுத்தி அத்தகைய சூழ்நிலைகளில் இருந்து தங்களைத் தாங்களே வெளியேற்றிக் கொள்ள எளிதான நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டது இப்பயிற்சி” என்றும் அந்த அதிகாரி கூறினார்.

பிஎம்டிசியால் திட்டமிடப்பட்ட திட்டத்தின் படி, இந்த பயிற்சி 42 மணிநேர கால அளவைக் கொண்டிருக்கும், மேலும் 120 நிமிட அமர்வுகளில் 21 நாட்களுக்கு மேல் கற்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் - இந்தியா புறக்கணிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை! – மத்திய அரசு அதிரடி

Shanmugapriya

கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம் – முதலமைச்சர் அதிரடி!

Lekha Shree

கேரள அரசு ஊழில் நிறைந்த அரசு: கடுமையாக தாக்கிப் பேசிய ஜே.பி.நட்டா!

Tamil Mint

ஆளே இல்லாமல் வந்த புல்லட்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்… வைரலாகும் வீடியோ..!

Lekha Shree

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுமா? விவசாயிகள் இந்திய அரசுடன் எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை!

Tamil Mint

வட்டிக்கு வட்டி தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

Tamil Mint

பயணிகளின் முக்கிய தகவல்கள் கசிவு… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஏர் இந்தியா!

Lekha Shree

வெளிநாட்டினர் ஆதரவு அளிப்பதில் என்ன பிரச்சனை – விவசாயிகள் கேள்வி

Tamil Mint

நாட்டை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 4,329 பேர் பலி…!

sathya suganthi

மத்திய அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது: புது உத்தரவு

Tamil Mint

நீட் தேர்வை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை – மத்திய அரசு அதிரடி

suma lekha

கருப்பு மற்றும் வெள்ளையை அடுத்து மிரட்ட வரும் மஞ்சள் பூஞ்சை! – எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Lekha Shree