போலி முகநூல் கணக்கு மூலம் பணமோசடி செய்த கும்பல் கைது


தமிழக காவல் துறை என்ற போலி முகநூல் கணக்கின் மூலம் பணமோசடி செய்த இருவரை மத்திய சைபர் கிரைம் சிறப்பு குழு ராஜஸ்தானிலுள்ள அவர்களின் மறைவிடத்தில் வைத்து கைது செய்தனர். முன்னர் கைது செய்யப்பட்ட அவர்களின் மூன்று கூட்டாளிகளுடன் நேற்று போலீசார் அவர்களை சென்னை அழைத்து வந்தனர். 

இந்த மோசடி கும்பல் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் ஆணையர் தினகரன், சில கூடுதல் போலீஸ் ஜெனரல் மற்றும் உதவி கமிஷனர் பெயர்களில் போலி முகநூல் கணக்கு வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Also Read  துரைமுருகன், டி ஆர் பாலுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

இக்கும்பல் அக்காவல்துறை அதிகாரிகளின் அசல் முகநூல் கணக்கில் இருந்து புகைப்படங்களைப் பதிவிறக்கம் செய்து போலி கணக்குகள் ஆரம்பித்து உள்ளனர். மேலும் அவ்வதிகாரிகளுக்குத் தெரிந்தவர்களிடம் தொலைபேசியில் தனிப்பட்ட முறையில் பேசி மருத்துவ தேவைக்காக பணம் பெறுவது போல் ஆன்லைன் மூலம் பணம் பெற்று உள்ளனர். பின்னர் அப்பணம் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை  தொடர்ந்தனர். 

Also Read  திருக்கோவில் எனும் பெயரில் தொலைக்காட்சி-தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கூடுதல் துணை ஆணையர் சரவணகுமார், உதவி போலீஸ் கமிஷனர் துரை மற்றும் இன்ஸ்பெக்டர் வினோத் ஆகியோர் ராஜஸ்தானில் முகாமிட்டு முக்கிய குற்றவாளியான ஷகீல் கானை கைது செய்தனர். 

இக்கும்பல் தமிழகத்தில் மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலும் தங்களின் கைவரிசையை காட்டியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Also Read  4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் இணைந்தால் மாபெரும் சக்தியாக உருவாகும்” – கருணாஸ்

Lekha Shree

பிற மாவட்டங்களுக்கு செல்ல இபாஸ் தேவையா? – தமிழக அரசு விளக்கம்

sathya suganthi

“12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆன்லைனில் நடைபெறாது” – அமைச்சர் அன்பில் மகேஷ்

Lekha Shree

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனிதநேயமற்றவர்”: கே.பி.ராமலிங்கம்

Tamil Mint

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்; யாரை காக்க இந்த புதிய நாடாளுமன்றம்? – கமல்ஹாசன்

Tamil Mint

குஷ்பு பாஜகவில் சேர்ந்ததற்கு என்ன காரணம்? பரபரப்பு தகவல்கள்

Tamil Mint

இவர்களுக்கு தான் அமைச்சர் பதவி.. ஸ்டாலின் முடிவால் அப்செட்டில் திமுக சீனியர்கள்..

Devaraj

சாத்தான்குளம் ஆகிறதா செங்கல்பட்டு? படா தொல்லை தரும் படாளம் இன்ஸ்பெக்டர்

Tamil Mint

நிவாரணத்தொகை பொருட்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு : தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

suma lekha

டெல்டா மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tamil Mint

வரதட்சணை கொடுமை: குழந்தையை கொன்று விட்டு தாயும் தற்கொலை…

VIGNESH PERUMAL

PSBBயை அடுத்து மகரிஷி வித்யா மந்திர் : பாலியல் புகாரில் மேலும் ஒரு ஆசிரியர் சஸ்பெண்ட்

sathya suganthi