மக்களைப் பிளவுபடுத்தும் பேரணிகள் அனுமதிக்கப்படாது: அஇஅதிமுக


மத வெறுப்பிலிருந்து உருவாகும் அரசியலுக்கு என்றும் அஇஅதிமுக அரசு இடமளிக்காது என அக்கட்சியினர் தங்களின் ‘நமது அம்மா’ இதழில்  தெரிவித்துள்ளனர். 

சில  நாட்களுக்கு முன் தமிழக பாஜகா கட்சியினர் வேல் யாத்திரை நடத்தினர். இதற்கு பல எதிர்ப்புகள் எழுந்தன. மேலும் அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர். இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து இன்று அக்கட்சியின் நட்பு கட்சியான அஇஅதிமுக வேல் யாத்திரைக்கு எதிராக தங்களின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.  

Also Read  திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

“கறுப்பர் கூட்டமாக இருந்தாலும் சரி அல்லது காவி கொடி பிடிப்பவர்களானாலும் சரி அவர்கள்  ஒன்றை மட்டும் தெரிந்துகொள்ள வேண்டும். அஇஅதிமுக அரசானது இனம் மற்றும் மதவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. மக்களை பிளவுபடுத்தும் அரசியலையும் பேரணிகளையும் அது அனுமதிக்காது” என ‘நமது அம்மா’ இதழில் கூறப்பட்டு உள்ளது. 

மேலும் தமிழக மக்கள் மதத்தை, மனிதஇனத்தின் வழிகாட்டும் விளக்காகவே இன்று வரை கருதுகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது. 

Also Read  தொடக்கப் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்.!

நமது அம்மா பத்திரிகையில் நவம்பர் 21 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வருவதாகவும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் நடைபெறும் பாஜக நிகழ்வுகளில் அவர் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை தமிழகம் முழுவதும் திட்டமிடப்பட்டுள்ள இந்த யாத்திரை, மாநிலத்தில் உள்ள  இந்து வாக்குகளை பலப்படுத்தும் நோக்கில் உள்ளதாக தெரிகிறது.

Also Read  வாக்குகள் குறைவாகவும், அதிகமாகவும் பதிவான டாப் 5 இடங்கள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் ரஜினிக்கு விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன்

Tamil Mint

20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

sathya suganthi

“பப்ஜி மதன்” மீது பாய்ந்தது குண்டர் சட்டம்…!

sathya suganthi

பள்ளிகள் திறப்பு குறித்து அரசு இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

தமிழகத்தில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய்…! மூக்கிலிருந்து கொட்டும் ரத்தம்…! அறிகுறி என்ன?

sathya suganthi

ஏப்ரல் 9 முதல் லாக்டவுன்? என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்? முழு விவரம் இதோ!

Devaraj

கலக்கும் தாராபுரம்…! தோற்றவருக்கு மத்திய அமைச்சர் பதவி…! வென்றவர் மாநில அமைச்சர்…!

sathya suganthi

வைகோல் போருக்குள் பதுக்கப்பட்ட ரூ.ஒரு கோடி – வருமானவரித்துறை சோதனையில் சிக்கிய எம்எல்ஏவின் ஓட்டுநர் …!

Devaraj

பிரபல பட்டிமன்ற பேச்சாளருக்கு முக்கிய பொறுப்பு… தமிழக அரசு அதிரடி!

Lekha Shree

இரட்டை இலைக்கு கை கொடுக்கும் பாஜக… கைகழுவிய பாமக..! கதறும் அதிமுக!

Devaraj

திருட முயன்று ஏடிஎம் இயந்திரத்திற்குள் சிக்கிய திருடன்… நாமக்கல்லில் நிகழ்ந்த வேடிக்கை சம்பவம்..!

Lekha Shree

ஒரே மாதத்தில் 10 காட்டெருமைகள் உயிரிழப்பு: கொடைக்கானலில் அதிர்ச்சி.

mani maran