முதல்வருக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!


டெல்லியில் மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை தரகர்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட திமுகவினரிடையே மு.க. ஸ்டாலின் இன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசியதாவது:

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், எப்போதும் வெள்ளத்தால் சூழப்படும் கடலூர் மாவட்டத்துக்கு நிரந்தரத் தீர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்வேன் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

மழை வந்தாலே கடலூரில் வெள்ளம் வரும். இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

Also Read  வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: டாக்டர் ராமதாஸ் கண்ணீர் மல்க அறிக்கை!

 தானே புயல் ஏற்பட்ட 2011 முதல் ஆட்சியில் இருக்கிறது அ.தி.மு.க., வெள்ளத் தடுப்புப் பணிக்காக என்ன செய்தது? ஏதாவது தொலை நோக்குப் பார்வையுடன் திட்டமிட்டீர்களா?

மழை வெள்ளத்திற்கு ஆளாகும் கடலூர் மாவட்டத்தில் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு 2015-ஆம் ஆண்டு 140 கோடி ரூபாய்க்குத் திட்டங்கள் தீட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏரி, குளங்கள் தூர்வாருதல், வடிகால் கால்வாய் கட்டுதல், ஆற்றுக் கரைகளைப் பலப்படுத்துதல் போன்ற பணிகள் செய்யப்பட்டதாகச் சொன்னார்கள். 

Also Read  பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் - சீமான் ட்வீட்!

ஆனால் அதனை முறையாகச் செய்யவில்லை என்பது, இப்போது பெய்த மழையில் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. அந்தப் பணத்தை முறையாக செலவு செய்திருந்தால் இந்தளவுக்கு வெள்ளம் வந்திருக்காது!

கடலூர் கெடிலம் ஆற்றின் கரைகளை திருவந்திபுரத்தில் இருந்து தேவனாம்பட்டினம் வரை பலப்படுத்துவதில் முறையாக பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று மக்கள் சொல்கிறார்கள். சுமார் 22 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொடைக்கானலுல சட்டவிரோதமா சொத்து - வரிமானவரித்துறையை சரிகட்ட PSBBல சீட்டு - குட்டிபத்மினி புகார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

துணை முதல்வரிடம் ஆசி பெற்றார் ‘மிஸ் இந்தியா 2020’ பாஷினி பாத்திமா

Tamil Mint

சென்னை காவல்துறை காவலர்களுக்கு அவர்களது பிறந்தநாளன்று விடுமுறை

Tamil Mint

தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும், அரசு திட்டவட்டம்

Tamil Mint

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த தமிழக அரசு, அடம்பிடிக்கும் இந்து அமைப்புகள்

Tamil Mint

“தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

“நெல்லையில் ‘பொருநை’ அருங்காட்சியகம் அமைக்கப்படும்” – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Lekha Shree

“நிலக்கரி காணவில்லை” – அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு..!

Lekha Shree

கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் மனைவி பரபரப்பு வீடியோ வெளியீடு

Tamil Mint

இந்தியாவில் வாரிசு அரசியலை பாஜக ஒழித்துள்ளது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Tamil Mint

படப்பிடிப்பின் போது வலது கையில் காயம்: அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அருண் விஜய்.!

mani maran

வங்கக்கடலில் உருவானது புதிய புயல்… தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree

யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா கைது…!

Lekha Shree