மேலும் தளர்வுகள்: முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை


நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் ஊரடங்கு மார்ச் 25-ம் தேதி தொடங்கி  நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 8 மாதங்களாக கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.  

ஊரடங்கு அமலில் இருந்தாலும் பொதுமக்களின் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படவில்லை. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தற்பொழுது செயல்பட்டு வருகின்றன. 

ரயில், பேருந்து, ஆட்டோ, மற்றும் பிற வாகனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயில்கள், தியேட்டர் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களும் திறக்கப்பட்டுள்ளது.  

Also Read  நாளை செய்தியாளர் சந்திப்பு: ஓபிஎஸ் சூசகம்

இதுவரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிகள், கல்லுரிகள் திறப்பு, மெரினா கடற்கரை மற்றும் நீச்சல்குளம் ஆகியவற்றிற்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. 

இதையடுத்து டிசம்பர் மாதம் முதல் மேலும் பல்வேறு தளர்வுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது கொரோனா  தொற்று தமிழகத்தில் வெகுவாக குறைந்துள்ளதால் ஊரடங்கு நீடிக்கப்படாத என்திரு பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 

Also Read  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். 

ஒவ்வொரு முறையும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு கலெக்டர், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்வது வழக்கம்.

Also Read  தமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழை: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

காலையில் காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இதுகுறித்து விவாதிக்கும் முதலமைச்சர், பிற்பகலில் தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியீடு

sathya suganthi

திமுக வேட்பாளருக்கு நன்றி தெரிவித்த அதிமுக நிர்வாகி! ஏன் தெரியுமா?

Lekha Shree

இன்று முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி

Tamil Mint

செருப்பை தூக்கிச் சென்ற தலித் நிர்வாகி சர்ச்சையில் சிக்கிய திமுக எம்.எல்.ஏ.!

Tamil Mint

கோவை அருகே ரயிலில் மோதி காயம் அடைந்த யானை பலி!

Lekha Shree

பாலியல் வழக்கு – சிவசங்கர் பாபாவின் பள்ளியில் இருந்து வெளியேறிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்!

Lekha Shree

போராட்ட வழக்குகள் வாபஸ் – சட்டசபையை அசர வைத்த மு.க.ஸ்டாலின் உரை…!

sathya suganthi

கடலூர் மாவட்டத்தில் மட்டும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 4 பேர் பலி

sathya suganthi

ஊரடங்கில் அடுத்த தளர்வுகள் என்னென்ன? – முழு விவரம் இதோ…!

sathya suganthi

பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராசுவுக்கு கொரோனா

Tamil Mint

எடப்பாடி உட்பட 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Tamil Mint

“ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி!

Lekha Shree