வடகிழக்கு பருவமழை- சென்னை, திருப்பத்தூர், சிவகங்கையில் இயல்பைவிட 40 சதவீதம் அதிக மழை


வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து நிவர், புரெவி புயல்கள் அடுத்தடுத்து உருவாகி தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.

ஏரி, குளங்கள், கால்வாய்கள், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை இயல்பை விட குறைவாக பெய்ததால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது.

ஆனால் இந்த வருடம் பருவமழை போதுமான அளவு பெய்துள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை கிடைத்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மண்டல துணை இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

Also Read  கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டால் குழந்தை எதிர்ப்பு சக்தியுடன் பிறக்குமா?

வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் 31-ந்தேதி வரை உள்ளது. இந்த கால கட்டத்தில் தமிழகம் முழுவதும் 44 செ.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால் நேற்று வரை 41 செ.மீ மழை கிடைத்துள்ளது. இயல்பு அளவை பெற 3 செ.மீ மழை கிடைக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் இந்த காலகட்டத்தில் 38 செ.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 41 செ.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 6 சதவீதம் அதிகம் ஆகும்.

Also Read  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,969 பேருக்கு கொரோனா தொற்று - 29 பேர் உயிரிழப்பு!

சென்னை, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட 40 சதவீதத்துக்கும் மேல் மழை அதிகம் பெய்துள்ளது. திருப்பத்தூரில் 53 சதவீதமும், சிவகங்கையில் 36 சதவீதமும், சென்னையில் 47 சதவீதமும் கூடுதலாக மழை பெய்துள்ளது.

இயல்பை விட மிக குறைவாக ஒரு சில மாவட்டங்களில் மழை பதிவாகி உள்ளது. திருச்சியில் 37 சதவீதமும், கன்னியாகுமரியில் 36 சதவீதமும், நீலகிரியில் 20 சதவீதமும் இயல்பை விட குறைவாக மழை பெய்துள்ளது.

Also Read  டாப் 5 வின்னர்ஸ்…! அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் விவரம்…!

இவ்வாறு அவர் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தொடக்கப் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்.!

suma lekha

“அண்ணாமலை ஆடியோக்கள்; சிக்கும் போலி சிங்கம்!” – மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட காணொளியால் பரபரப்பு..!

Lekha Shree

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… முதலமைச்சர் நாளை ஆலோசனை..!

Lekha Shree

“தடையை மீறி விநாயகர் சிலை வைப்போம்” – அர்ஜுன் சம்பத் உறுதி..!

Lekha Shree

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

Tamil Mint

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றம்!

Tamil Mint

தமிழகம்: நீட் தேர்வுக்கு அஞ்சி இளைஞர் தற்கொலை…! திமுகவை கடுமையாக சாடும் நெட்டிசன்கள்..!

Lekha Shree

ஆளுநர் உரை : தமிழகத்துக்கு குட் நியூஸ்…! இந்தியாவுக்கு பேட்நியூஸ்…!

sathya suganthi

தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி – விபி துரைசாமி

Tamil Mint

ரஜினி கட்சி எப்போது? புதிய தகவல்

Tamil Mint

அதிமுகவை மீட்டெடுக்க சசிகலா சட்ட போராட்டம் நடத்துவார் – டிடிவி தினகரன்

Tamil Mint

அமைச்சர் கார் மீது சரவெடியை தூக்கி வீசி அட்டகாசம் செய்த அமமுகவினர்…!

Devaraj